» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை!
திங்கள் 4, நவம்பர் 2024 10:20:21 AM (IST)
தூத்துக்குடி நகர் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது.
வங்கக்கடலில் உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தூத்துக்குடி, நெல்லை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது.
இன்று காலை 6.30 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் அதிக பட்சமாக குலசேகரன்பட்டினத்தில் 33 மிமீ மழை பெய்துள்ளது. மேலும், திருச்செந்தூர் 27மிமீ, தூத்துக்குடியில் 8.10 மிமீ, எட்டயபுரம் 5.10மிமீ, ஸ்ரீவைகுண்டம் 4.10மிமீ, சாத்தான்குளம் 2.20 மிமீ, கழுகுமலை 2 மிமீ, என மாவட்டத்தில் மொத்தம் 81.5 மிமீ மழை பெய்துள்ளது.