» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
உறவினரை கத்திரிக்கோலால் குத்தியவர் கைது!
திங்கள் 4, நவம்பர் 2024 8:51:42 AM (IST)
சாத்தான்குளம் அருகே உறவினரை கத்திரிக்கோலால் குத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள பழனியப்பபுரம் கீழத்தெருவைச் சேர்ந்த கும்கான் மகன் குணதீஸ் (47). தொழிலாளி. இவர், சம்பவத்தன்று மாலையில் பழனியப்பபுரம் நான்கு முக்கு ரோட்டில் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மைத்துனர் அந்தோணி ராஜ் (52), ஒழுங்காக வேலைக்கு செல்ல வேண்டும் என்று கூறி அவரை கண்டித்துள்ளார்.
இதில் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த அந்தோணிராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்திரிக்கோலால் அவரை குத்திவிட்டு ஓடிவிட்டார். இதில் காயமடைந்த குணதீஸ் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்தோணிராஜை கைது செய்தார்.