» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் போலீசாருக்கு மிரட்டல்: சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது
திங்கள் 4, நவம்பர் 2024 8:30:21 AM (IST)
தூத்துக்குடியில் போலீசாரை கத்தியைக் காட்டி மிரட்டியதாக இளம்சிறார்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி தென்பாகம் காவல் உதவி ஆய்வாளர் மாணிக்கராஜ் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். மில்லர்புரம் மையவாடி அருகே சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த 3 பேரைப் பிடித்து விசாரித்தபோது, அவர்கள் கத்தியைக் காட்டி போலீசாரை மிரட்டினராம்.
விசாரணையில், அவர்கள் தூத்துக்குடி டிஎம்பி காலனியைச் சேர்ந்த சுப்புராஜ் என்ற தியோராஜ் (24), இரு இளம்சிறார்கள் என்பதும், அவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. போலீசார் வழக்குப் பதிந்து, மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
naan thaanNov 6, 2024 - 05:02:53 PM | Posted IP 162.1*****