» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் பாரம்பரிய கலைகள் முழங்க தமிழ்நாடு பிறந்தநாள் விழா!
வெள்ளி 1, நவம்பர் 2024 9:29:29 PM (IST)
தூத்துக்குடி பேருந்து நிலைய வளாகத்தில் தமிழன்டா இயக்கம் சார்பில் பாரம்பரிய கலைகள் முழங்க தமிழ்நாடு பிறந்தநாள் விழா நடைபெற்றது.
மொழிவாரி மாநிலங்கள் பிரிந்த நாளை முன்னிட்டு, தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையம் வளாகத்தில் தமிழன்டா இயக்கத்தினர் கடலை மிட்டாய் வழங்கி கொண்டாடினர். விழாவில் பேசிய தமிழன்டா இயக்க தலைவர் ஜெகஜீவன் அந்தந்த மாநில பண்பாடுகள் அந்தந்த மாநிலத்தில் போற்றப்பட வேண்டும் செண்டை மேளம் கேரளாவில் மட்டுமே போற்றப்பட வேண்டும் என்றார்.
விழாவில் தமிழன்டா இயக்க கௌரவ ஆலோசகர்கள் ரமேஷ் பாண்டியன், சமூக ஆர்வலர் அருணா தேவி ரமேஷ் பாண்டியன் தமிழன்டா இயக்கத் தலைவர் ஜெகஜீவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்