» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி சார்பில் இலவச கண் பரிசோதனை
வெள்ளி 1, நவம்பர் 2024 7:31:11 PM (IST)
தூத்துக்குடியில் வருகிற 3ஆம் தேதி தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் சார்பில் இலவச கண் பரிசோதனை நடைபெற உள்ளது.
தூத்துக்குடியை தலைமை இடமாக கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் 103வது நிறுவனர் தின விழாவை முன்னிட்டு வங்கியின் மட்டக்கடை கிளை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் உதவியுடன் தூத்துக்குடி அரவிந்த் கண் மருத்துவமனை நடத்தும் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் வடக்கூர் பேட்டரி சர்ச் வளாகத்தில் உள்ள பிரைமரி மற்றும் நர்சரி பள்ளியில் வைத்து வருகிற 3ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை)காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கண் பரிசோதனை முகாம்நடைபெறுகிறது
இந்த முகாமில் கண்புரை நோயாளிகளுக்கு இலவசமாக கண் ஆபரேஷன் செய்யப்படும் மருத்துவ முகாமுக்கு வருபவர்கள் தங்களது வாக்காளர் அட்டை, ஆதார் அடையாள அட்டை ஜெராக்ஸ் மற்றும் தங்களது செல்போன் கொண்டு வர வேண்டும் என்று தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி மட்டக்கடை கிளை மேலாளர் தெரிவித்துள்ளார்.