» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி பஸ் நிலைய வாகன காப்பகத்தில் விதிமுறைகள் மீறல்? பொதுமக்கள் புகார்

வெள்ளி 1, நவம்பர் 2024 12:29:42 PM (IST)



தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் விதிகளை மீறி வாகன நிறுத்தம் மாத வாடகைக்கு விடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் என்று அழைக்கப்படும் அண்ணா பேருந்து நிலையம் முழுமையாக இடித்து அகற்றப்பட்டு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.58.67 கோடி மதிப்பில் 4 தளங்களுடன் அதி நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள அண்ணா பேருந்து நிலையத்தை அமைச்சர் கே.என்.நேரு கடந்த வருடம் அக்டோபர் மாதம் திறந்து வைத்தார். 

பேருந்து நிலையத்தில் வெளியூர் செல்லும் பயணிகள் வாகனங்களை நிறுத்துவதற்காக பேருந்து நிலையத்தின் முதல் தளத்தில் 384 இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமும், இரண்டாவது தளத்தில் 45 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமும் கட்டப்பட்டுள்ளன. இங்கு நிறுத்தப்படும் நான்கு சக்கர வாகனங்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.40 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 

அலுவல் காரணமாக வெளியூர் செல்லும் பயணிகள் தங்களது வாகனத்தை இங்கு நிறுத்திவிட்டு சென்று வந்த நிலையில், சமீப காலமாக மாத வாடகை்கு மட்டுமே வாகனங்களை நிறுத்தலாம் என இங்கு பணிபுரியும் ஊழியர்கள் பயணிகள் வாகனங்களை நிறுத்த மறுப்பது பயணிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் வாகன நிறுத்தும் இடங்களில் மாத வாடகையாக ரூ.1700 முதல் 2000 வரை வசூலிக்கும் நிலையில் இங்கு மாத வாடகையாக ரூ.1000 மட்டுமே வசூலிப்பதால் பலரும் இங்கு விதிகளை மீறி மாத வாடகை்கு வாகனங்களை நிறுத்தி வைப்பதாகவும், ஊழியர்களிடம் இது குறித்து கேட்டால் மாநகராட்சி உத்தரவு படியே தாங்கள் செயல்படுவதாக கூறுகின்றனர் என பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். 

இந்த முறைகேடுகளை தவிர்க்க 2 நாட்களுக்கு மேல் நிறுத்தும் வாகனங்களுக்கு கட்டணத்தை இரு மடங்காகவும், ஒரு வாரத்திற்க்கு மேல் நிறுத்தும் வாகனங்களுக்கு மூன்று நான்கு மடங்காகவும் மாநகராட்சி உயர்த்தினால், மாநகராட்சிக்கு வருவாய் அதிகரிப்பதுடன், முறைகேடாக நிறுத்தப்படும் வாகனங்களையும் கட்டுப்படுத்த முடிவதுடன் பயணிகளும் பயன் பெறுவர் என பொதுமக்கள் தெரிவித்தனர். 

பயணிகளின் வசதிக்காக பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வாகன நிறுத்தம் விதி மீறி செயல்படும் ஊழியர்களின் அலட்சியப் போக்கால் பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தியிருப்பதை கவனத்தில் கொண்டு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து

இந்தியன்Nov 3, 2024 - 02:20:42 PM | Posted IP 162.1*****

மேலும் இரு சக்கர வாகனங்கள் இரண்டாவது தளத்தில் நிறுத்த அனுமதிக்கவேண்டும்.

தமிழன்Nov 3, 2024 - 02:13:25 PM | Posted IP 172.7*****

வாகனங்கள் ஏற ஒருவழி இறங்க ஒரு வழி என்று வைக்க வேண்டும். இல் லை என்றால் விபத்து ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது.

m.sundaramNov 2, 2024 - 08:26:03 PM | Posted IP 172.7*****

Very bad administration and against the will of the common people. Remadial action must be taken immediately to restore the status quo

உள்ளூர்வாசிNov 2, 2024 - 11:35:35 AM | Posted IP 172.7*****

https://www.tutyonline.net/view/31_250185/20241028161830.html

CitizenNov 2, 2024 - 11:33:57 AM | Posted IP 172.7*****

https://www.tutyonline.net/view/31_250185/20241028161830.html

BalamuruganNov 2, 2024 - 11:28:56 AM | Posted IP 172.7*****

ஆணையாளர் நினைத்தால் முடியும் ஆனால் மேயர் மீறி எதுவும் பண்ண முடியாது

அப்பிராணிNov 2, 2024 - 07:32:03 AM | Posted IP 172.7*****

வோட்டுக்கு பணம் வாங்கிக் கொண்டு மக்கள் விரோத கட்சிக்கு வாக்களித்து அவர்களை தலையில் வைத்துக் கொண்டாடும் தூத்துக்குடி மக்களுக்கு இதுவும் வேண்டும்... இன்னமும் வேண்டும்..

RAMAR P BRAYANT NAGAR 11TH ST TUTICORINNov 1, 2024 - 11:11:59 PM | Posted IP 172.7*****

மேற்கு திசையில் இறங்கும் சாய்தளம் தரமற்ற நிலையில் உள்ளது. விபத்துக்கள் ஏற்படுவதற்கு முன்னர் சாய்தளம் செப்பனிட வேண்டுகிறேன்.

BabuNov 1, 2024 - 10:46:31 PM | Posted IP 162.1*****

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

சேகர்Nov 1, 2024 - 06:36:05 PM | Posted IP 162.1*****

நானும் பல முறை வாகனம் நிறுத்த வரும்பொழுது எல்லாம் இடம் இல்லை மாத வாடகை வண்டிகள் வரும் வேறு எங்காவது போய் நிறுத்து என அலைக்கழிக்கப்பட்டிருக்கிறேன்...

முட்டாள்Nov 1, 2024 - 03:41:11 PM | Posted IP 162.1*****

எல்லாம் துட்டு சாக்கடை பயலுக

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital


New Shape Tailors




Thoothukudi Business Directory