» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஜெனரேட்டர் விற்பனை செய்வதாக கூறி ரூ.5லட்சம் பணம் மோசடி செய்தவர் கைது
புதன் 9, அக்டோபர் 2024 5:34:35 PM (IST)
தூத்துக்குடியில் ஆன்லைனில் ஜெனரேட்டர் விற்பனை செய்வதாக கூறி ரூ.5லட்சம் பணம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடியை சேர்ந்த ஒருவர் ஜெனரேட்டர் வாங்குவதற்காக இணையதளத்தில் தேடிய போது கிடைத்த ஹரி என்பவருடைய எண்ணை தொடர்பு கொண்டு பேசியபோது அவர் பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்தினால் ஜெனரேட்டர் தருவதாக கூறியுள்ளார். இதனை நம்பி மேற்படி தூத்துக்குடியை சேர்ந்த நபர் மொத்தம் ரூபாய் 5,10,000/- பணத்தை வங்கி கணக்கு மூலம் கொடுத்துள்ளார். ஆனால் மேற்படி ஹரி என்பவர் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஜெனரேட்டரை தராமல் ஏமாற்றி மோசடி செய்துள்ளனர்.இதுகுறித்து மேற்படி நபர் National Cyber crime Reporting Portalல் புகார் பதிவு செய்துள்ளார். மேற்படி பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இ.கா.ப உத்தரவின் பேரில் தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் சகாய ஜோஸ் மேற்பார்வையில் சைபர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் (பொறுப்பு) சோமசுந்தரம் தலைமையில் போலீசார் அடங்கிய தனிப்படை போலீசார் தொழில் நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டனர்.
இதில் காஞ்சிபுரம் மாவட்டம் கீழ்கட்டளை காந்தி நகர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த தியாகராஜன் மகன் கண்ணன் (42) என்பவர் மேற்படி பாதிக்கப்பட்ட நபரிடம் ஹரி என பெயரைக் கூறி பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து மேற்படி தனிப்படை போலீசார் மேற்படி எதிரி கண்ணனை பெங்களூருவில் வைத்து கைது செய்து அவரிடம் இருந்த 2 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேற்படி வழக்கில் எதிரியை கண்டுபிடித்து கைது செய்த சைபர் குற்றப் பிரிவு தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காடல்குடி காவல் நிலையத்தில் எஸ்பி ஆய்வு!
வியாழன் 13, நவம்பர் 2025 9:09:28 PM (IST)

தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜராக வந்தவரை கைது செய்ய எதிர்ப்பு: போலீசார் - வழக்கறிஞர்கள் வாக்குவாதம்!
வியாழன் 13, நவம்பர் 2025 8:21:43 PM (IST)

மாப்பிள்ளையூரணியில் ஆயுர்வேத மருத்துவ முகாம்!
வியாழன் 13, நவம்பர் 2025 8:10:20 PM (IST)

தசரா திருவிழா, கந்தசஷ்டி திருவிழாவில் சிறப்பாக பணியாற்றிய ஆய்வாளர்களுக்கு எஸ்பி பாராட்டு!
வியாழன் 13, நவம்பர் 2025 8:04:12 PM (IST)

ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக் கோப்பை அறிமுக விழா!
வியாழன் 13, நவம்பர் 2025 5:51:24 PM (IST)

நவ.15ல் தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல ஊழியர் பிரதிநிதிகள் தேர்தல்: வாக்கு சேகரிக்கும் பணி தீவிரம்!!
வியாழன் 13, நவம்பர் 2025 5:47:23 PM (IST)








