» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பறவை காவடி எடுத்து குலசை பக்தர் வழிபாடு!
ஞாயிறு 6, அக்டோபர் 2024 5:18:36 PM (IST)

குலசை தசரா திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் பக்தர் ஒருவர் பறவை காவடி எடுத்து ஊர்வலமாக சென்று வழிபாடு நடத்தினார்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் ஆலய தசரா திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து வருவதுடன் அம்மனின் அருள் கிடைக்க வேண்டி தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி வருகின்றனர் தூத்துக்குடி தாளமுத்து நகர் பகுதி முத்தாரம்மன் ஆலய தசரா குழு சார்பில் சார்பில் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து வருகின்றனர்
இதில் சிறப்பாக முத்தாரம்மன் ஆலய தசரா குழுவைச் சேர்ந்த பக்தர் கணேசன் என்பவர் முத்தாரம்மனுக்கு நேர்த்தி கடனாக தனது உடலில் பல பகுதிகளில் அலகு குத்தி பறவை காவடி எடுத்து ஊர்வலமாக சென்றார், இந்த பறவை காவடி காவடி தூத்துக்குடி சந்தன மாரியம்மன் ஆலயத்தில் இருந்து சிறப்பு பூஜைக்கு பின் துவங்கி நகரின் பல்வேறு பகுதியில் வழியாக தாள முத்துநகர் முத்தாரம்மன் ஆலயத்தை அடைந்தது. இந்த பறவை காவடி ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் சட்டமன்ற பொது கணக்குக்குழு 12ம் தேதி ஆய்வு : ஆட்சியர் தகவல்!
திங்கள் 10, நவம்பர் 2025 8:17:57 AM (IST)

மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் டாஸ்மாக் ஊழியர் விஷம் கலந்து குடித்து தற்கொலை!
திங்கள் 10, நவம்பர் 2025 8:12:24 AM (IST)

கணவரை பிரிந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
திங்கள் 10, நவம்பர் 2025 8:04:41 AM (IST)

தூத்துக்குடியில் பைக் விபத்தில் காயம் அடைந்த விஏஓ உயிரிழப்பு!
திங்கள் 10, நவம்பர் 2025 7:59:49 AM (IST)

காதல் தோல்வியால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை : தூத்துக்குடியில் பரிதாபம்!!
திங்கள் 10, நவம்பர் 2025 7:49:16 AM (IST)

வாலிபரை அரிவாளால் தாக்கி பைக், பணம் பறிப்பு: சிறுவன் உள்பட 3 பேர் கைது
திங்கள் 10, நவம்பர் 2025 7:46:35 AM (IST)








