» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி திமுக நிர்வாகிகள் அதிமுகவில் ஐக்கியம்!
புதன் 18, செப்டம்பர் 2024 6:06:27 PM (IST)
தூத்துக்குடி திமுக நிர்வாகிகள் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் முன்னிலையில் அக்கட்சியில் இணந்தனர்.
தூத்துக்குடி சண்முகபுரம் திமுக நிர்வாகி மாடசாமி தலைமையில் ஏ.பொன்னுதுரை, எஸ்.கே.எம்.கார்திக்ராஜா, ஜான்சன் ஆகியோர் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் முன்னிலையில் அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டனர்.
முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் சுதாகர், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், மாவட்ட மாணவர் அணி செயலாளர் விக்னேஷ், மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு செயலாளர் பிரபாகர், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் திருச்சிற்றம்பலம், மாவட்ட மாணவர்அணித் துணைத் தலைவர் டேவிட், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் முனியசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.