» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சிறுமி, இளம்பெண் பாலியல் பலாத்காரம்: 2பேர் மீது போக்ஸோ வழக்கு!
வெள்ளி 13, செப்டம்பர் 2024 8:06:07 AM (IST)
தூத்துக்குடியில் சிறுமி, இளம்பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த இரு இளைஞர்கள் மீது போக்ஸோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடியை சேர்ந்தவர் ஜெசிந்த் (23). இவர் 17 வயது சிறுமியை, திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்தபுகாரின்பேரில் தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல, தூத்துக்குடி தருவைகுளத்தை சேர்ந்த ரெனால்ட் (25) என்பவர், 18 வயது இளம்பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தாராம். இதுகுறித்த புகாரின்பேரில் தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.