» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருமணம் நிச்சயமான இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை - தூத்துக்குடியில் பரிதாபம்!
வியாழன் 12, செப்டம்பர் 2024 11:13:16 AM (IST)
தூத்துக்குடியில் திருமணம் நிச்சயமான இளம்பெண் தற்கொலை செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி தெற்கு சோட்டையன் தோப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லையா. கூலி தொழிலாளி. இவரது மகள் முருகேஸ்வரி (27), பி.காம் பட்டதாரியான இவருக்கு மாப்பிள்ளை பார்த்து வருகிற 15ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருமணம் நடைபெற இருந்ததாம். இதற்காக உறவினர்களுக்கு பத்திரிக்கை கொடுத்து வந்தனர்.
இந்நிலையில் திருமண செலவுக்கு பணம் இல்லாமல் அவரது தந்தை செல்லையா கஷ்டப்பட்டு வந்ததாராம். இதனால் மன வேதனையடைந்த முருகேஸ்வரி தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் ராஜாமணி வழக்கு பதிவு செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் (பொ) ஷோபா ஜென்ஸி விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கழிவுமீன் நிறுவனங்களை மூடக்கோரும் தொடர் போராட்டத்தின் 400ஆவது நாள் நிகழ்ச்சி!
வியாழன் 19, ஜூன் 2025 12:47:28 PM (IST)

ஆற்றுப்பாலத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு ரூ.30 இலட்சம் நிதியுதவி!
வியாழன் 19, ஜூன் 2025 12:34:23 PM (IST)

தூத்துக்குடியில் ஐடி கம்பெனி அதிபரிடம் ரூ.1½ கோடி நிலம் மோசடி: எஸ்பி அலுவலகத்தில் புகார்!
வியாழன் 19, ஜூன் 2025 12:09:56 PM (IST)

தூத்துக்குடியில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா: முதியோர் இல்லத்தில் உணவு வழங்கல்
வியாழன் 19, ஜூன் 2025 11:50:55 AM (IST)

தூத்துக்குடியில் கோவில், பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரிக்கை!
வியாழன் 19, ஜூன் 2025 10:49:32 AM (IST)

நூறு அடி உயர மின் கோபுரத்தில் ஏறி வாலிபர் போராட்டம்!
வியாழன் 19, ஜூன் 2025 10:37:54 AM (IST)
