» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மாசு குறைந்துள்ளது: மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்

புதன் 11, செப்டம்பர் 2024 5:38:30 PM (IST)



தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் அனைத்து கட்டமைப்பு வசதிகளும் முறைப்படுத்தி நிறைவேற்றியிருப்பதால் மாசு குறைந்துள்ளது என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார். 

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் மண்டல வாரியாக வாரந்தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி மில்லா்புரத்தில் உள்ள மேற்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் முகாமிற்கு மாநகராட்சி ஆணையர் மதுபாலன் தலைமை வகித்தார். துணை மேயர் ஜெனிட்டா, மேற்கு மண்டல தலைவர் அன்னலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதனை தொடங்கி வைத்து பொதுமக்களிடம் பெயர்மாற்றம் முகவாிமாற்றம் குடியிருப்பு கட்டுவதற்கான அனுமதி பாதாளசாக்கடை விண்ணப்பம் குடிநீர் இணைப்பு விண்ணப்பம் உள்ளிட்ட பல்ேவறு மனுக்களை பெற்றுக்கொண்டு மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி பேசுகையில் "மேற்கு மண்டலத்தில் 3ம் கட்ட குறைதீா்க்கும் முகாம் நடைபெறுகிறது இதில் பெறப்படும் மனுக்கள் அனைத்தும் முறையாக பதிவு செய்யப்பட்டு அதில் சில மாற்றங்களுக்கு உடனடியாக ஆணைகள் வழங்கப்பட்டு மீதி 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படுகிறது. 

அதில் குறிப்பாக சாலை கால்வாய் உள்ளிட்ட வசதிகள் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். அதில் கல்லூாி கோவில் ஆலயங்கள் மருத்துவமணைகள் என அந்த பகுதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு பின்னர் அதை முறைப்படுத்தி செயல்படுத்துகிறோம். 4 வீடுகள் உள்ள பகுதிகளிலும் ஒரு வீடு இருக்கிற பகுதியிலும் சாலை வசதி கேட்டு விண்ணப்பித்துள்ளனர் அதையும் முறைப்படுத்தி செய்து கொடுப்போம். ஒரு திட்டம் செயல்படுத்துகிறோம் என்றால் அது அனைத்து பகுதிகளுக்கும் சென்றடையும் வகையில் பணிகள் நடைபெறுகின்றன. 

இந்த குறைதீர்க்கும் முகாம் தொடர்ந்து மாநகராட்சி பகுதியில் நடைபெறும் பல ஐஏஎஸ் அதிகாாிகள் இருந்தாலும் நம்முடைய ஆணையர் எல்லா வகையிலும் துணையாக இருந்து நல்ல ஓத்துழைப்பு வழங்குவது மூலம் வளர்ச்சி பணிகள் நடைபெறுகின்றன. எல்லா பகுதிகளுக்கும் சாலை கால்வாய் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு பல பணிகள் நிறைவேற்றி கொடுத்தது மட்டுமின்றி போக்குவரத்து நொிசலை குறைக்கும் வகையில் பல வழிசாலைகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளதால் போக்குவரத்து நெருக்கடியும் குறைந்து பல சாலைகளில் வாகனங்கள் செல்வதால் மாசு அளவு 180ஆக இருந்தது தற்போது மேற்கொண்ட ஆய்வில் 60 ஆக குறைந்துள்ளது தொடர்ந்து அனைத்து தரப்பினர்களின் கோாிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு தற்போது தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளில் தூத்துக்குடி முதன்மை மாநகராட்சியாக விளங்குவதற்கு அடுத்தக்கட்ட பணிகளையும் அனைத்து பகுதிகளிலும் மேற்கொள்ளுவோம் என்று பேசினார்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை ஆணையர் ராஜாராம், உதவி ஆணையர் சுரேஷ்குமாா், நகர அமைப்பு திட்ட செயற்பொறியாளர் ரெங்கநாதன், இளநிலை பொறியாளர்சேகா், குழாய் ஆய்வாளர் ராமமூர்த்தி, சுகாதார நகா்நல அலுவலர் டாக்டர் வினோத்ராஜா, சுகாதார ஆய்வாளர் ஸ்டாலின்பாக்கியநாதன், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, கவுன்சிலர்கள் கீதாமுருகேசன், பொன்னப்பன், இசக்கிராஜா, சந்திரபோஸ், சரவணகுமார், கந்தசாமி, கனகராஜ், ஜான், கண்ணன், பகுதி செயலாளர் ரவீந்திரன், இலக்கிய அணி தலைவர் சக்திவேல், திமுக வட்ட அவைத்தலைவர் சுப்பிரமணியன், வட்டப்பிரதிநிதி ஜெபக்குமார் ரவி, போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் ஜோஸ்பர், பிரபாகர், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், மற்றும் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

ஆமாSep 12, 2024 - 06:39:50 PM | Posted IP 162.1*****

திராவிட மாடல் ஒயின் ஷாப் பக்கம் கடந்துபோகும்போது குடல் புடுங்க மாதிரி மூத்திரம் வாடை வருது

தமிழன்Sep 12, 2024 - 11:06:58 AM | Posted IP 162.1*****

மாசு குறைந்தது மகிழ்ச்சி. ஆனால் கடந்த இரண்டு மாதத்திற்கு மேலாக தூத்துக்குடியில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது.ஆதலால் கொசு மருந்து அடித்து தூத்துக்குடி மக்களை கொசுக்களில் இருந்து காப்பாற்றுங்கள்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory