» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் 594 பேருக்கு குடும்ப அட்டைகள் : அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்!
புதன் 11, செப்டம்பர் 2024 5:27:31 PM (IST)
தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் 594 பேருக்கு குடும்ப அட்டைகள் மற்றும் 11 பேருக்கு பட்டாக்கள் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.
நிகழ்ச்சியில், வட்டாட்சியர் முரளிதரன், குடிமைப்பொருள் வழங்கல் தனி வட்டாட்சியர் ஞானராஜ், வருவாய் ஆய்வாளர் சரவணவேல் ராஜ், அண்ணா நகர் பகுதி திமுக செயலாளர் ரவீந்திரன், மாமன்ற உறுப்பினர் தெய்வேந்திரன், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண் சுந்தர், வட்டச் செயலாளர் கந்தசாமி, வைகுண்டபதி பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.