» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
த.வெள்ளையன் மறைவுக்கு தமிழக அரசு சார்பில் அஞ்சலி: வணிகர் சங்கம் கோரிக்கை!
புதன் 11, செப்டம்பர் 2024 5:18:39 PM (IST)
வணிகர் சங்கங்களின் பேரவை த.வெள்ளையன் மறைவுக்கு தமிழக அரசு சார்பில் அஞ்சலி செலுத்த வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக வணிகர் சங்கங்களின் பேரவை தூத்துக்குடி மாவட்ட தலைவர் பா.விநாயக மூர்த்தி தமிழக முதல்வருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், "தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை நிறுவனர் மற்றும் தலைவர், த. வெள்ளையன் மறைவானது தமிழ்நாட்டின் அணைத்து வணிகர்களையும் ஆழாத்துயரில் ஆழ்த்தி உள்ளது.
அவர் வியாபாரிகளுக்காக மட்டுமல்லாமல், விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்காக பல போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றவர். தூத்துக்குடி மக்களுக்கான ஸ்டெர்லைட் போராட்டத்தை முன்னெடுத்த மூத்த தலைவர். அவரது தியாகத்தை நெஞ்சில் நிறுத்தி அரசின் சார்பில் செப்.12 தூத்துக்குடி மாவட்டம், பிச்சுவிளையில் நடைபெறும் இறுதிச் சடங்கில், அண்ணாருக்கு அரசு மரியாதை செலுத்திட வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளார்.