» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி உப்பாத்து ஓடையில் தூர்வாரும் பணி : அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்!
செவ்வாய் 13, ஆகஸ்ட் 2024 12:13:20 PM (IST)
தூத்துக்குடி உப்பாத்து ஓடையில் தூர்வாரும் பணியை அமைச்சர் கீதாஜீவன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி ஓட்டப்பிடாரம், புதியம்புத்தூர், கயத்தாறு, கடம்பூர் வழியாக வரும் காட்டாற்று வௌ்ளம், உப்பாத்து ஓடை வழியாக தான் கடலுக்கு செல்லும், கடந்த கால வௌ்ளத்தில் இந்த பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது. மழைக்கு முன்பாக, அரசு சார்பில் ஓரு புறம் உப்பாத்து ஓடை தூா்வாறும் பணி நடந்தாலும், உப்பள அதிபர்கள், அமைச்சர் சொந்த நிதி உள்ளிட்டவை மூலம் 2 கிட்டாச்சி வாகனம் மூலம், தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படுகிறது.
இந்த பணியை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கொடியசைத்து துவக்கி வைத்து கூறுகையில் "மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த பெரு மழையினால் மிகப்பொிய சேதம் ஏற்பட்டது. காட்டாற்று வௌ்ள உபாி நீா், உப்பாத்து ஓடை வழியாகத் தான் கடலுக்கு செல்ல வேண்டியிருக்கிறது. இந்த ஓடையில் 3 இடங்களில் வௌ்ளத்தில் உடைப்பு ஏற்பட்டது.
இதில் ஓரு இடத்தில் அவை சாி செய்யப்பட்டது. இரண்டு இடத்தில் சீர் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. திருச்செந்தூர் ரோட்டில் உப்பாத்து ஓடையில் துவங்கி உபாி நீர் கடலுக்கு செல்லும் வரை ஓடை 6 கி.மீட்டர் தூரத்திற்கு தனியார் பங்களிப்புடன் கூடிய சமூக பொறுப்புாிமை நிதியில் இருந்து பணிகள் தற்போது மேற்கொள்ளப்படும் பணி துவக்கப்பட்டுள்ளது. மழைக்கு முன்பாக அனைத்து பணிகளும் செய்து முடிக்கப்படும் என்று கூறினார்.
நிகழ்ச்சியில் திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் வக்கீல் பாலகுருசாமி, மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமாா், பகுதி செயலாளர் மேகநாதன், கவுன்சிலர்கள் விஜயகுமார், சுயம்பு, ராஜதுரை, வட்ட செயலாளர் மனோகரன், நெசவாளர் அணி துணை அமைப்பாளர் குமரன், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமாா், வட்டப் பிரதிநிதி பாஸ்கா், பொதுப்பணித்துறை கோரம்பள்ளம் வடிநில கோட்ட உதவி செயற்பொறியாளா் சுபாஷ், உதவி பொறியாளர் பாலமுருகன், வீரநாயக்கன் தட்டு கணேசன், முத்துலட்சுமி, மற்றும் மணி, அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.