» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில் தர்மகர்த்தாவை செங்கலால் தாக்கிய 2பேர் கைது!
செவ்வாய் 13, ஆகஸ்ட் 2024 11:22:57 AM (IST)
முறப்பநாடு அருகே கோவில் கறி விருந்து தகராறில் தர்மகர்த்தாவை செங்கலால் தாக்கிய 2பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு அருகே சென்னல்பட்டி கிராமத்தில் உள்ள முண்டசாமி கோவிலில் நெல்லை கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் தங்கையா மகன் முருகன் (30) என்பவர் தர்மகர்த்தாவாக உள்ளார். இந்த கோவிலில் கடந்த 11ஆம் தேதி இரவு கொடை விழா முடிந்த பின்னர் கறி விருந்து நடைபெற்றது.
அப்போது அதே கிராமத்தை சேர்ந்த முருகன் மகன் புரளிமுத்து (23), மாரியப்பன் மகன் முண்டசாமி (19), கந்தசாமி மகன் இசக்கிமுத்து (27) ஆகிய 3 பேரும் கூடுதலாக கறி கேட்டு தகராறு செய்தார்களாம். இதனை தர்மகர்த்தா முருகன் கண்டித்தாராம். இதில், ஆத்திரமடைந்த அவர்கள் மூவரும் தர்மகர்த்தாவை செங்கலால் சரமாரியாக தாக்கினார்களாம்.
இதில் பலத்த காயமடைந்த முருகன் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக புகாரின் பேரில், முறப்பநாடு காவல் நிலையத்தில் தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி ராஜசுந்தர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ்வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சுடலைமுத்து, முண்டசாமி ஆகிய 2பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இசக்கிமுத்துவை தேடி வருகிறார்கள்.