» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்ப் புதல்வன் திட்டம் : 4497 மாணவர்கள் தகுதி!
வெள்ளி 9, ஆகஸ்ட் 2024 3:43:58 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் 2024-2025 ஆம் நிதியாண்டில் 58 கல்லூரிகளில் 4497 மாணவர்கள் மாதந்தோறும் ரூ.1000 பெற உள்ளனர் என்று ஆட்சியர் தெரிவித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (09.08.2024) கோயம்புத்தூர் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாட்டு மாணவர்கள் தரணியை வென்றிட, உயர்கல்வி பயிலும் அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி (தமிழ்வழி) மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
அதனைதொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டம் கிள்ளிகுளம் வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி நிலைய கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா ஆகியோர் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 பெறும் வங்கி கணக்கிற்கான அட்டைகளை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தெரிவித்ததாவது: உயர்கல்வியில். பெண்களின் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட "மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் புதுமைப்பெண் திட்டம்" பெண்களின் உயர் கல்வியில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளதைப் போல் அரசு பள்ளிகளில் பயின்ற, ஏழை எளிய மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கிடவும் அரசுப்பள்ளி மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை உயர்த்திடவும் ‘தமிழ்ப்புதல்வன்" எனும் மாபெரும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வருமான உச்ச வரம்பு, இனம் மற்றும் ஒதுக்கிட ஆகிய எந்த வொரு பாகுபாடும் இன்றி, 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்ற மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்கள், தமிழகத்தில் உள்ள எவ்வித கல்வி நிறுவனங்களிலும் உயர்கல்வி பயிலும் மாணவர்களும் பயனடைவார்கள். மேலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் மற்றும் பாடப் பிரிவில் பயிலும் மாணவர்கள் இத்திட்டத்தில் பயனடைவார்கள். அரசுப் பள்ளிகளிலும் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியிலும் 8 ஆம் வகுப்பு அல்லது 9 ஆம் வகுப்பு அல்லது 10 ஆம் வகுப்பு வரை பயின்று தொழிற்பயிற்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களும் இத்திட்டத்தின் மூலம் பயனடைய தகுதி உடையவர்கள் ஆகிறார்கள்.
பொருளாதார வசதிக் குறைவு உட்பட பல்வேறு காரணங்களால் பள்ளிப் படிப்பிற்குப் பின் உயர் கல்வியைத் தொடர முடியாத நிலையில் இருக்கும் மாணவர்களுக்கு உயர்கல்வியில் சேர உதவுகிறது. கல்லூரி செல்லும் மாணவர்களின் உள்ளங்களில் தன்னம்பிக்கையை வளர்க்கிறது, கற்கும் ஆர்வத்தைப் பெருக்குகிறது. பெற்றோரின் பொருளாதாரச் சுமையைக் குறைக்கிறது. குடும்பங்களின் வளத்தை மேம்படுத்துகிறது. உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்துகிறது.
வேறு ஏதேனும் உதவித் தொகை பெற்று வருபவராக இருப்பினும் இத்திட்டத்தில் பயனடைவாhர்கள்.ஒரே குடும்பத்திலிருந்து எத்தனை மாணவர்கள் தகுதி பெற்றிருப்பினும் அனைவரும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். நமது இளைஞர்களின் ஆற்றலை ஆக்கப் பூர்வமாக பயன்படுத்தி நமது மாநிலம் மற்றும் நாட்டின் எதிர்காலத் தூண்களாகத் திகழ இத்திட்டம் பேருதவி புரிகிறது என தெரிவித்தார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் 2024-2025 ஆம் நிதியாண்டில் 58 கல்லூரிகளில் 4497 தகுதி வாய்ந்த மாணவர்கள் உள்ளனர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சித் தலைவர் அ.பிரம்மசக்தி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் ம.பிரபு, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் துரைராஜ், கில்லிகுளம் வேளாண்மைக் கல்லூரி முதல்வர் தேரடிமணி, மாவட்ட சமூக நல அலுவலர் செல்வி.பிரேமலதா, திருவைகுண்டம் வட்டாட்சியர் சிவக்குமார், ஒன் ஸ்டாப் சென்டர் செரின், கருங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் அரவிந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மீனவர் கொலை வழக்கில் 3பேர் கைது!
வியாழன் 24, ஏப்ரல் 2025 11:31:37 AM (IST)

கோவில்பட்டியில் உலக புத்தக தினவிழா!
வியாழன் 24, ஏப்ரல் 2025 11:17:30 AM (IST)

தூத்துக்குடி துப்பாக்கி சூடு: அதிகாரிகள் சொத்து விவர சேகரிப்புக்கு எதிரான மனு தள்ளிவைப்பு
வியாழன் 24, ஏப்ரல் 2025 11:04:39 AM (IST)

செபத்தையாபுரம் சி.எஸ்.ஐ. ஆலயத்தில் அசன விழா
வியாழன் 24, ஏப்ரல் 2025 10:54:41 AM (IST)

சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்தவருக்கு ஆயுள் தண்டனை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
வியாழன் 24, ஏப்ரல் 2025 10:20:26 AM (IST)

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிகர லாபம் ரூ.1,183 கோடியாக உயர்வு : நிர்வாக இயக்குனர் தகவல்
வியாழன் 24, ஏப்ரல் 2025 8:20:38 AM (IST)
