» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மலேசியாவுக்கு சுற்றுலா... கே.சின்னத்துரை அன்கோ வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!
திங்கள் 5, ஆகஸ்ட் 2024 5:24:35 PM (IST)

தூத்துக்குடி கே.சின்னத்துரை அன்கோ நிறுவனத்தின் சார்பில் வாடிக்கையாளர்கள் மலேசியாவுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.
தென் தமிழகத்தில் புகழ்பெற்ற, திருச்செந்தூர் மற்றும் ஏரலில் மக்களின் பேராதரவை பெற்ற பிரபல பிரபல ஜவுளி நிறுவனமான கே.சின்னத்துரை அன்கோ, தூத்துக்குடி தமிழ் சாலையில் இயங்கி வருகிறது. இந்நிலையில், கே.சின்னத்துரை அன் கோ ஜவுளிக் கடையில் கோடை கால சிறப்பு விற்பனை நடைபெற்றது.
திருச்செந்தூர், எரல், தூத்துக்குடி ஜவுளிக் கடைகளில் ரூ.3ஆயிரத்திற்கும் மேல் ஜவுளி வாங்கிய வாடிக்கையாளர்கள் குலுக்கல் முறையில் 120பேர் தேர்வு செய்யப்பட்டு விமானத்தில் உள்நாடு மற்றும் வெளிநாட்டுகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கே.சின்னத்துரை அன்கோ நிறுவனத்தின் உரிமையாளர்கள் திருநாவுக்கரசு, அரிராமகிருஷ்ணன், நமச்சிவாயம், மற்றும் மேலாளர்கள் ஊழியர்கள் செய்திருந்தனர்.
சுற்றுலா குறித்து வாடிக்கையாளர்கள் கூறும்பாேது, "இதுவரை எந்த ஒரு ஜவுளி நிறுவனமும் வழங்காத புதிய முயற்சியாக இது உள்ளது. இதில் உள்நாட்டு பயணமாக மணாலிக்கு இன்ப சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டோம். வெளிநாட்டு பயணமாக மலேசியா நாட்டில் உள்ள முக்கிய சுற்றுலா இடங்களுக்கு சென்றோம். எங்கள் அனைவருக்கும் தங்குமிடம், உணவு, பயண வசதிகள் அனைத்தும் கே.சின்னத்துரை அன்கோ சார்பில செய்து கொடுக்கப்பட்டது. குடும்பத்துடன் விமான பயணம் மேற்கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்று தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
RevathyAug 6, 2024 - 03:28:32 PM | Posted IP 162.1*****
Please encourage your staff
வாடிக்கையாளர்Aug 6, 2024 - 01:12:30 PM | Posted IP 162.1*****
இந்த செய்தியை வேலவன் ஹைப்பர் மார்க்கெட், கண்ணா சில்க், JN Textiles , போன்ற ஜவுளி ஓனர்களிடம் கண்ணுக்கு படும் வரை ஷேர் பண்ணுங்க
செல்வநாயகம் தென்காசிAug 6, 2024 - 09:53:57 AM | Posted IP 172.7*****
வாடிக்கையாளர்கள் எவ்வளவு முக்கியமோ அதுபோல நமக்கு வாய்த்த நேர்மையான, திறமையான தொழிலாளர்களும் ரொம்ப ரொம்ப முக்கியம் அதனால தொழிலாளர்களையும் நீங்க ஊக்கப்படுத்தி ஏதாவது ஒரு வழியில் கௌரவப்படுத்துங்கள் நன்றி 👍👍👍👍👍
மேலும் தொடரும் செய்திகள்

ஐஏஎஸ் தேர்வில் விவசாய குடும்பத்தை சேர்ந்த மாணவன் வெற்றி!
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 9:46:04 PM (IST)

தூத்துக்குடியில் தீக்குளித்த தனியார் நிறுவன ஊழியர் சாவு : போலீஸ் விசாரணை
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 8:35:24 PM (IST)

மருத்துவ சிகிச்சை தரவரிசை பட்டியலில் தூத்துக்குடி மாநகராட்சி புதிய சாதனை!
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 8:29:28 PM (IST)

நாசரேத் அருகே கிரிக்கெட் போட்டி: பாட்டக்கரை அணி கோப்பையை வென்றது!
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 8:17:11 PM (IST)

தூத்துக்குடியில் இடி மின்னலுடன் திடீர் மழை : மின்னல் தாக்கியதில் பசு மாடு உயிரிழப்பு
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 8:10:39 PM (IST)

மேலச்செவல் டிடிடிஏ பள்ளியில் புதிய வகுப்பறைக் கட்டிடம்: ராபர்ட் புரூஸ் எம்.பி. திறந்து வைத்தார்.
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 8:03:21 PM (IST)

KalpdhayalAug 6, 2024 - 09:40:39 PM | Posted IP 162.1*****