» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சிறுமி தவறவிட்ட தங்க செயினை ஒப்படைத்த நபருக்கு காவல்துறை பாராட்டு!
திங்கள் 5, ஆகஸ்ட் 2024 4:55:46 PM (IST)
தூத்துக்குடி மாதா கோவில் அருகே சிறுமி தவற விட்ட தங்க நகையை ஒப்படைத்த நபருக்கு காவல்துறையினர் பாராட்டு தெரிவித்தனர்.
தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் 6-வது தெருவைச் சேர்ந்தவர் விவேக் என்பவரது மகள் ஹர்ஷா (9) அணிந்திருந்த 9 கிராம் டாலர் செயின் மாதா கோவில் அருகே தொலைந்து விட்டது. இதனை சண்முகபுரம் ஞானமைக்கேல் மகன் அந்தோணி (43) என்பவர் கண்டெடுத்து மாதா கோவில் புற காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
சிறிது நேரம் கழித்து செயின் தொலைந்து விட்டதாக விவேக் புகார் கூறினரர். இதையடுத்து சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் விசாரணை நடத்தி நகையை உரியரிடம் ஒப்படைத்தார். கீழே கிடந்த நகையை ஒப்படைத்த அந்தோணியை காவல்துறையைினர் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.
TuticorianAug 7, 2024 - 04:44:17 PM | Posted IP 172.7*****