» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சிஎம் டிராபி டி20 வீல் சேர் கிரிக்கெட் போட்டி: மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்
திங்கள் 5, ஆகஸ்ட் 2024 3:51:28 PM (IST)
தூத்துக்குடியில் சிஎம் டிராபி டி20 வீல் சேர் கிரிக்கெட் போட்டியை மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி சாயர்புரம் அருகில் உள்ள விகாசா பள்ளியில் வைத்து எட்டு மாநிலங்கள் பங்கு பெறும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயரில் தமிழ்நாடு வீல் சேர் கிரிக்கெட் அசோசியேஷன் மற்றும் தனியார் நிறுவனங்களும் இணைந்து நடத்துகின்ற சிஎம் டிராபி டி20 என்ற வீல் சேர் கிரிக்கெட் போட்டியினை மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார். விழாவில் போட்டி ஒருங்கிணைப்பாளர்துரை பாண்டியன், ரைபின் அவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்..