» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் அற்புதம் மெடிக்கல்ஸ் திறப்பு விழா
சனி 3, ஆகஸ்ட் 2024 9:02:11 PM (IST)
தூத்துக்குடியில் அற்புதம் மெடிக்கல்ஸ் நிறுவனத்தை தூத்துக்குடி நாசரேத் திருமண்டல பேராயர் எஸ்.இ.சி.தேவசகாயம் திறந்து வைத்தார்.
தூத்துக்குடி தமிழ்ச்சாலையில் காய்கறி மார்க்கெட் வளாகத்தில் அற்புதம் ஆயில் ஸ்டோர் இயங்கி வருகிறது. இதன் அருகில் அற்புதம் மெடிக்கல்ஸ் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவிற்கு வெஜிடேபிள் மார்க்கெட் லிமிட்டெட் தலைவர் எஸ்டிஎஸ் ஞானராஜ் தலைமை வகித்தார். தொழிலதிபர் பொன்குமரன் முன்னிலை வகித்தார். தூத்துக்குடி நாசரேத் திருமண்டல பேராயர் எஸ்.இ.சி.தேவசகாயம் ஜெபித்து அற்புதம் மெடிக்கல்ஸ் நிறுவனத்தை திறந்து வைத்தார். மேலாளர் ரூபன் அனைவரையும் வரவேற்றார்.
விழாவில் மருத்துவர்கள், நகரின் முக்கிய பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். எங்களது அற்புதம் மெடிக்கல்ஸ் நிறுவனத்தில் அனைத்து வகையான மருந்துகளும் 17 சதவீதம் தள்ளுபடியில் விற்பனை செய்யப்படும் என்று தலைமை செயல் அதிகாரி ஜெபன் தெரிவித்தார்.