» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய‌து!

வெள்ளி 26, ஜூலை 2024 10:01:11 AM (IST)



தூத்துக்குடியில் உலகப் புகழ்பெற்ற பனிமயமாதா பேராலயத்தின் 442ஆம் ஆண்டு திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. 

தூத்துக்குடியில் உள்ள திவ்ய சந்தமரிய தஸ்நேவிஸ் பனிமயமாதா பேராலயம் ரோம் நகரின் பசிலிக்கா அந்தஸ்து பெற்றது. உலக புகழ்பெற்ற இந்த பேராலயத்தின் 442ஆம் ஆண்டு திருவிழா இன்று (வியாழக்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்கிய‌து. தொடர்ந்து இன்று மதியம் 12 மணிக்கு அன்னைக்கு பொன் மகுடம் அணிவித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 

ஆலய கொடியேற்றத்தை முன்னிட்டு நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் பக்தர்கள் நிறைகுடம் பால் மற்றும் வாழைப்பழம் தார், ஆகியவற்றை கொடிமரத்தின் முன் வைத்து வணங்கி கொடியேற்றம் முடிந்ததும் அனைவருக்கும் வழங்கினார்கள். சிறு குழந்தைகளை பெரியவர்கள் கையில் தூக்கி சென்று கொடி மரத்தின் முன்பு உட்காரவைத்து கொண்டு சென்றனர். கொடியேற்றத்தை முன்னிட்டு சமாதனத்தை வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட வென்புறாக்கள் பறக்கவிடப்பட்டன. மற்றும் துறைமுகத்திலிருந்து சைரன் ஒலிப்பு ஒலிக்கப்பட்டது.

கொடியேற்றும் நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, எஸ்.பி., பாலாஜி சரவணன், கோட்டாட்சியர் பிரபு, மேயர் ஜெகன் பெரியசாமி, துணை மேயர் ஜெனிட்டா, திமுக மாநில மீணவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மண்டல தலைவர்கள் நிர்மல்ராஜ், அதிமுக மாநில வா்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன், தேசிய உழைப்பாளர்கள் மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் சுரேஷ் பர்னாந்து, பரதர் நலசங்க தலைவர் ரெனால்ட் வில்லவராயர், செயலாளர் அந்தோணிசாமி, பொருளாளர் காஸ்ட்ரோ, பொதுச்செயலாளர் இன்னாசி, குரூஸ்பர்னாந்து நற்பணி மன்ற தலைவர் ஹெர்மன்கில்ட், முன்னாள் கவுன்சிலர்கள் அருள், செந்தில்குமார், மற்றும் ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, உள்பட லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

விழா நாட்களில் தினமும் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகியன நடக்கிறது. விழாவில் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயர்கள், பங்குத்தந்தைகள் பங்கேற்று சிறப்பு திருப்பலி நடத்துகின்றனர். மேலும் இந்த விழாவில் வெளிநாடு மற்றும் இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்க உள்ளனர். மாவட்ட நிர்வாகம், மாவட்ட காவல்துறை சார்பில் திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யப்பட்டு வருகின்றன.



விழாவிற்கான ஏற்பாடுகளை பேராலய அதிபர் மற்றும் பங்குத்தந்தை ஸ்டார்வின், உதவி பங்குத்தந்தை பாலன், பனிமய மாதா அன்னை பேராலய பங்கு மேய்ப்பு பணிக்குழுவை சேர்ந்த துணைத் தலைவர் அண்டோ, செயலாளர் எட்வின் பாண்டியன், துணைச் செயலாளர் பெனார்ட், பொருளாளர் ஜோசப்சொாீஸ், அருட்சகோதரர் தினகரன், மற்றும் பங்குப் பேரவையினர், பங்கு மக்கள் செய்துவருகின்றனர்.

விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை எஸ்பி பாலாஜி சரவணன் தலைமையில் 2 ஏடிஎஸ்பிகள், 5 டிஎஸ்.பிகள், 15 இன்ஸ்பெக்டர்கள் 35 எஸ்ஐக்கள் மற்றும் 900க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கான கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள ஆலயவளாகம் அருகே தற்காலிகமாக கண்காணிப்பு கோபுரங்கள் போலீசார் அமைத்துள்ளனர்.


மக்கள் கருத்து

அன்புJul 26, 2024 - 12:26:11 PM | Posted IP 162.1*****

கோயில் செல்லும் ஜார்ஜ் ரோடு குண்டும் குழியுமாக நேற்றுவரை இருந்தது இன்று சம்பளமாக சரி செய்யப்பட்டது சாக்கடைகளால் ரோட்டில் செல்லும் பக்தர்கள் சாக்கடையில் விழாமல் ஓரமாக செல்லவும் பகுதி மாமன்ற உருப்பினர் இதை சரிசெய்ய முயன்றால் அன்னையின் அருளும் ஆசியும் கிடைக்கபெறுவதாக

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital



New Shape Tailors



CSC Computer Education



Thoothukudi Business Directory