» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அனல் மின் நிலைய பொறியாளா் வீட்டில் 50 பவுன் நகை திருட்டு
திங்கள் 22, ஜூலை 2024 7:56:07 AM (IST)
தூத்துக்குடியில் ஓய்வுபெற்ற அனல்மின் நிலையப் பொறியாளர் வீட்டில் 50 பவுன் நகை, 45ஆயிரம் பணத்தைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மட்டக்கடை பகுதியைச் சேர்ந்த முத்துவீரன் மகன் காந்தி (63). தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள தனது மகன் வீட்டுக்கு சென்று உள்ளார். நேற்று வீடு திரும்பியபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் வீட்டின் உள்ளே பீரோவில் இருந்த 50 பவுன் நகைகள், ரூ. 45 ஆயிரம் ரொக்கம் திருடுபோயிருந்தது. இதுகுறித்து புகாரின்பேரில், வடபாகம் போலீசார் வழக்குப் பதிந்து, அந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு ஏ.எஸ்.பி., கேல்கர் சுப்பிரமணிய பாலச்சந்திரா தலைமையிலான போலீசார் அங்கு சென்று பார்வையிட்டனர். இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்!
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 9:23:24 PM (IST)

மூத்த பெருமக்கள் நல்வாழ்விற்கு அதிக நிதி ஒதுக்கீடு : தமிழக முதல்வருக்கு கோரிக்கை!
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 8:31:01 PM (IST)

தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி: அழகர் பப்ளிக் பள்ளி அணி வெற்றி
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 8:08:36 PM (IST)

குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பணியிடங்கள் : பிப்.28க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 4:29:10 PM (IST)

ரேஷன் கடைகளில் விரல் ரேகைகளை பதிவு செய்ய வேண்டும்: ஆட்சியர் அறிவிப்பு
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 3:59:30 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் பிப்.26ல் மகா சிவராத்திரி விழா
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 3:33:55 PM (IST)
