» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திமுக ஆட்சியில் 3வது முறையாக மின் கட்டணம் உயர்வு : 23ஆம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!
ஞாயிறு 21, ஜூலை 2024 7:37:09 PM (IST)
திமுக அரசு பொறுப்பேற்ற மூன்றாண்டுகளில் தமிழகத்தில் தொடர்ந்து 3வது முறையாக மின் கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்து ஜூலை 23ம் தேதி தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது தமிழகத்தில் விடியா திமுக அரசு பொறுப்பேற்ற மூன்றாண்டுகளில் ஏற்கனவே இரண்டு முறை மின் கட்டணத்தை உயர்த்தியதன் காரணமாக பொதுமக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் தொடர்ந்து 3வது முறையாக மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்தி மக்களை வாட்டி வஞ்சிப்பதைக் கண்டித்தும், நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை மக்களுக்கு வழங்காமல் தட்டுப்பாட்டை காரணம் காட்டி திட்டத்தை நிறுத்த முயற்சிக்கும் திமுக அரசையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் நடத்திட அதிமுக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி தூத்துக்குடியில் நாளை 23.07.2024 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி விவிடி சிக்னல் எம்.ஜி.ஆர் திடலில் வைத்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் எனது தலைமையில் நடைபெறுகிறது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமைக் கழக நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, மாநகரபகுதி, நகர, பேரூராட்சி, மாநகர வட்ட, நகராட்சி மற்றும் பேரூராட்சி வார்டு, கிளை கழக நிர்வாகிகள் மற்றும் கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு அமைப்பு பிரதிநிதிகள், கழக தொண்டர்கள், மகளிர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பைக் மீது ஜீப் மோதி விபத்து: மாட்டு வியாபாரி பலி
திங்கள் 17, பிப்ரவரி 2025 10:43:38 AM (IST)

மாடியில் இருந்து தவறிவிழுந்த வடை மாஸ்டர் சாவு
திங்கள் 17, பிப்ரவரி 2025 10:35:51 AM (IST)

தமிழ்நாட்டிற்கு நிதி தர முடியாது என்று சொல்ல மத்திய அரசுக்கு உரிமை கிடையாது : கனிமொழி எம்பி பேட்டி
திங்கள் 17, பிப்ரவரி 2025 10:21:14 AM (IST)

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவா்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்!
திங்கள் 17, பிப்ரவரி 2025 8:27:05 AM (IST)

விண்வெளி அறிவியல் இளைஞர் மாநாட்டின் மாநில அளவிலான கருத்தரங்கம்
திங்கள் 17, பிப்ரவரி 2025 8:20:58 AM (IST)

வேலையில்லாத விரக்தியில் பூசாரி தற்கொலை!
திங்கள் 17, பிப்ரவரி 2025 8:17:33 AM (IST)
