» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கடல்சார் சுற்றுலா மேம்பாட்டு பணிகள்: ஆட்சியர் லட்சுமிபதி ஆய்வு!

செவ்வாய் 25, ஜூன் 2024 12:13:36 PM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் கடல்சார் சுற்றுலாவை மேம்படுத்துவது தொடர்பாக கடற்கரை பகுதிகளில் ஆட்சியர் லட்சுமிபதி ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் மற்றும் வேம்பார் கடற்கரை பகுதிகளில் சுற்றுலாத்துறை சார்பாக சுற்றுலா வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி இன்று களஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது இந்திய அரசு நிறுவனமான Rajiv Gandhi Centre for Aqua Culture (Artemia Project)> மீன் குஞ்சு வளர்ப்பு மையம், தருவை குளம், வனத்துறையின் சூழல் சுற்றுலா பகுதிகளில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து வேம்பார் கடற்கரை பகுதி, கலங்கரை விளக்கம் பகுதி, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சிற்றாறு முகத்துவாரம் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடல்சார் சுற்றுலாவை மேம்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு வனத்துறை மன்னார் வளைகுடா உயிர்க்கோள் காப்பக அறக்கட்டளை தருவைக்குளம் சமூகம் சார்ந்த சுழல் சுற்றுலா கடற்கரை, சுழல் சுற்றுலா தளம் மற்றும் வேம்பார் மீன் பிடி இறங்கு தளம் அருகில் உள்ள கடற்கரை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனைத்தொடர்ந்து விளாத்திகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய சத்துணவினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு அதன் தரம் குறித்த ஆய்வு செய்து, ஆசிரியர்களிடம் மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் பாட முறைகள் குறித்து ஆய்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். பின்னர் விளாத்திகுளம் பெரிய கண்மாய் எச்.சி.எல் சமுதாய பொறுப்பு நிதியிலிருந்து தூர்வாரப்படவுள்ளதை முன்னிட்டு கண்மாயினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் விளாத்திகுளத்தில் உள்ள ஆற்றங்கரை கண்மாயினை பார்வையிட்டார். அதனைத்தொடர்ந்து விளாத்திகுளத்தில் உள்ள ஆதிதிராவிடர் மாணவியர் விடுதியினை மாவட்ட பார்வையிட்டு அங்கு மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் விடுதியில் அடிப்படை வசதிகள் உள்ளனவா என ஆய்வு செய்தார்.

இக்களஆய்வில் திருநெல்வேலி சுற்றுலா அலுவலர் க.சீனிவாசன், வட்டாட்சியர்கள் ராமகிருஷ்ணன் (விளாத்திகுளம்), சுரேஷ் (ஓட்டப்பிடாரம்), ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக அலுவலர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ரத்தன் டாடா மறைவு: விவசாயிகள் அஞ்சலி!

வியாழன் 10, அக்டோபர் 2024 8:07:45 PM (IST)

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory