» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சர்வதேச யோகா தின இலச்சினை வடிவில் நின்று அசத்திய அரசு பள்ளி மாணவிகள்

வியாழன் 20, ஜூன் 2024 3:09:48 PM (IST)கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சர்வதேச யோகா தின இலச்சினை வடிவில் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நாடு முழுவதும் ஜூன் 21ம் தேதி உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு யோகாவின் அவசியத்தை வலியுறுத்தி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம்,  கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் யோகா வடிவில் நின்று யோகாவின் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இதில் பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலதா,பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் முத்து முருகன்,தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன்,உடற் கல்வி இயக்குனர் காளிராஜ் உள்பட ஆசிரியர்கள் மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital
Thoothukudi Business Directory