» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பைக்கை சேதப்படுத்தி, வாலிபரை தாக்கிய 2பேர் கைது!
செவ்வாய் 3, அக்டோபர் 2023 8:12:19 AM (IST)
தூத்துக்குடியில் கத்தியால் வெட்டி பைக் டயரை சேதப்படுத்தி, வாலிபரை தாக்கியதாக 2பேரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே உள்ள தங்கம்மாள்புரம் 4-வது தெருவை சேர்ந்தவர் முத்துலிங்கம். இவரது மகன் முத்துக்குமார் (20). மீனவர். இவர் சம்பவத்தன்று பைக்கில் முனியசாமி கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது, அங்கு நின்ற சூசை நகரைச் சேர்ந்த முத்தையா மகன் ரூபன் ராஜ் (21), திருமாஜி நகரைச் சேர்ந்த சிவனைந்த பெருமாள் மகன் ஆறுமுகம் என்ற அஜித் (21) ஆகிய 2 பேரும் அவரை கேலி செய்துள்ளனர்.
அதை முத்துக்குமார் தட்டிக்கேட்கவே, அவரை 2 பேரும் அவதூறாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் கத்தியால் முத்துக்குமாரின் மோட்டார் சைக்கிளின் 2 டயர்களையும் வெட்டி சேதப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து முத்துக்குமார் முத்தையாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர் வழக்குப்பதிவு செய்து ரூபன் ராஜ், ஆறுமுகம் ஆகியோரை கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வேளாண் திட்டத்திற்கு ரூ.34 கோடி கடன் வழங்க இலக்கு : ஆட்சியர் லட்சுமிபதி தகவல்!
வியாழன் 30, நவம்பர் 2023 10:38:42 AM (IST)

தூத்துக்குடியில் கத்தியைக் காட்டி பணம் கேட்டு மிரட்டிய ரவுடி கைது!
வியாழன் 30, நவம்பர் 2023 10:22:17 AM (IST)

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க வைரவிழா வட்டக் கிளை மாநாடு
வியாழன் 30, நவம்பர் 2023 9:58:12 AM (IST)

மக்கள் களம் நிகழ்ச்சியில் ரூ.35லட்சம் நலதிட்ட உதவிகள்: கனிமொழி எம்பி வழங்கினார்.
வியாழன் 30, நவம்பர் 2023 8:33:34 AM (IST)

சேவைக் குறைபாடு : ஒப்பந்தகாரர் ரூ.5 இலட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு!
வியாழன் 30, நவம்பர் 2023 8:27:49 AM (IST)

மேல்மருவத்தூர் இருமுடி திருவிழாவிற்கு தென் மாவட்ட ரயில் பயணிகளுக்கு கூடுதல் வசதி
வியாழன் 30, நவம்பர் 2023 8:15:57 AM (IST)
