» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் ஓடும் பஸ்சில் ஒருவர் திடீர் மரணம்!
திங்கள் 2, அக்டோபர் 2023 4:19:48 PM (IST)
தூத்துக்குடியில் பேருந்தில் பயணம் செய்த ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நெல்லையில் இருந்து தூத்துக்குடிக்கு அரசு பேருந்து வந்தது இந்த பஸ்ஸில் 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் பயணம் செய்து உள்ளார். இவர் வல்லநாட்டில் இருந்து தூத்துக்குடிக்கு டிக்கெட் வாங்கி உள்ளார். வரும் வழியில் இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது சிறிது நேரத்தில் பஸ்ஸில் படுத்தபடியே இறந்து விட்டார். இந்த பஸ் தூத்துக்குடி வந்ததும் டிரைவர் மத்திய பாகம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.
அதன் பெயரில் இன்ஸ்பெக்டர் ஐயப்பன் மற்றும் போலீசார் சம்பவத்தை சென்று உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், அவர் வல்லநாடு கற்பக விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த முத்து மகன் மாடசாமி (65) என்று தெரியவந்தது. விசாரணைக்கு பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் சக பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி அருகே காரில் கடத்தி வந்த 540 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவர் கைது
திங்கள் 11, டிசம்பர் 2023 7:54:54 PM (IST)

பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் தகவல்
திங்கள் 11, டிசம்பர் 2023 5:16:35 PM (IST)

மசாலா பாக்கெட்டில் வண்டுகள்: இழப்பீடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு!
திங்கள் 11, டிசம்பர் 2023 4:59:32 PM (IST)

காவலர் பயிற்சி பள்ளியில் இறுதித் தேர்வு: எஸ்பி பாலாஜி சரவணன் நேரில் ஆய்வு
திங்கள் 11, டிசம்பர் 2023 4:51:53 PM (IST)

தூத்துக்குடியில் ரூ.3 கோடி ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு!
திங்கள் 11, டிசம்பர் 2023 4:11:34 PM (IST)

மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவுகள் பதிவு விழிப்புணர்வு பேரணி!
திங்கள் 11, டிசம்பர் 2023 4:09:05 PM (IST)
