» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அனுமதி இல்லாமல் இயங்கி வரும் 68 மதுபான பார்களை மூட வேண்டும்: பாஜக வலியுறுத்தல்!

சனி 3, ஜூன் 2023 5:30:45 PM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி இயங்கி வரும் 68 டாஸ்மாக் பார்களை மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் பாஜக வலியுறுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த மகேஸ்வரன் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு அனுமதியுடன் இயங்கி வரும் மதுபான கூடங்களின் எண்ணிக்கை குறித்து டாஸ்மாக் மேளாளரிடம் கேட்டிருந்தார். இதற்கு தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 142 அரசு மதுபான கடைகளில் 74 கடைகளுக்கு மட்டுமே பார் உரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் மீதி உள்ள 68 கடைகள் பார் இல்லாத கடைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் இந்த 68 கடைகளும் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதரவுடன் செயல்பட்டு வருவதாக பாஜகவினர் குற்றம்சாட்டியுள்ளனர். இதைத் தொடர்ந்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமையில் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அதில் "தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 142 அரசு மதுபான கடைகளில் அனுமதி இல்லாமல் இயங்கி வரும் 68 மதுபான கூடங்களை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் பள்ளி கல்லூரிகள் அருகே உள்ள அரசு மதுபான கடைகளை அகற்ற வேண்டும். வரும் 15 தினங்களுக்குள் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க விட்டால் டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட போவதாக பாரதிய ஜனதா கட்சியினர் அறிவித்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory