» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஒடிசா இரயில் விபத்து: தூத்துக்குடியில் அஞ்சலி!

சனி 3, ஜூன் 2023 3:04:03 PM (IST)



ஒடிசாவில் இரயில் விபத்தில் மரணமடைந்தவர்களுக்கு தூத்துக்குடியில்  மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. 

எம்பவர் இந்தியா சமூக சேவை அமைப்பு மற்றும் தூத்துக்குடி மாவட்ட பயணிகள் சங்கம் சார்பில் ஒடிசாவில் இரயில் விபத்தில் மரணமடைந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தூத்துக்குடி பீச் ரோட்டிலுள்ள எம்பவர் மக்கள் மருந்தக வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய உறுப்பினரும், எம்பவர் இந்தியா கௌரவ செயலாளருமான ஆ.சங்கர் தலைமை தாங்கினார்.

ஒடிசாவில் நேற்று 5 நிமிட இடைவெளியில் 3 இரயில்கள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த விதமும் அதில் பயணம் செய்தவர்களின் நிலைமையும், உற்றார்களின் பரிதவிப்பையும் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. எண்ணிக்கையில் சொல்லப்படும் மரணங்களும், காயங்களும் மனதை துடி துடிக்க வைக்கிறது.

கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்தியாவிலேயே தயாரான இரயில் விபத்தை தடுக்க கூடிய கவாக் தொழில் நுட்பம் விபத்து நடந்த இந்த வழித்தடத்தில் பயன்பாட்டில் இல்லாதது இந்த விபத்திற்கு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது. ஆடம்பர இரயில்களுக்கு மட்டுமே அக்கறையும், முக்கியத்துவமும் அளிக்கப்படுகின்றது. சாதாரண இரயில்கள் அலட்சியம் செய்யப்படுகின்றது என்ற குரல்கள் நாடெங்கும் ஒலிக்கின்றது.

தூத்துக்குடி மாவட்ட பயணிகள் சங்க தலைவர் கல்யாண சுந்தரம், செயலாளர் பிரமநாயகம், பொறுப்பாளர்கள் லெட்சுமணன், ஆனந்தன், அந்தோணி முத்து ராஜா, சமூக ஆர்வலர் கணேசன், எம்பவர் மேலாளர் லலிதாம்பிகை, பணியாளர் தீபக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

கா செல்வராஜ்Jun 12, 2023 - 02:57:54 PM | Posted IP 172.7*****

Railway station crossing train train speed 30 km is best

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital







Thoothukudi Business Directory