» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் கோவிலில் மத்திய அமைச்சர் எல்.முருகன் சுவாமி தரிசனம்
சனி 27, மே 2023 8:25:24 AM (IST)
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மத்திய அமைச்சர் எல்.முருகன் சுவாமி தரிசனம் செய்தார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நேற்று முன்தினம் இரவு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வந்திருந்தார். கோவில் விருந்தினர் மாளிகையில் தங்கிய அவர் நேற்று அதிகாலை கோவிலுக்கு சென்று மூலவரை தரிசனம் செய்தார்.
பின்னர் சூரசம்ஹாரமூர்த்தி சன்னதியில் நடந்த சத்ரு சம்ஹார பூஜையில் கலந்து கொண்டு வழிபாடு செய்தார். அதைத் தொடர்ந்து மூலவர், சண்முகர் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.