» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அனுமதியின்றி இயங்கிய மதுபான பாருக்கு சீல்
சனி 27, மே 2023 8:22:56 AM (IST)
ஏரல் பஸ்நிலையம் அருகே அனுமதியின்றி இயங்கிய மதுபான பாருக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் பஸ்நிலையம் அருகில் இருந்து வாழவல்லான் ஊருக்கு செல்லும் வழியில் உள்ள வாய்க்கால் ரோட்டில் மதுபான பார் அனுமதியின்றி செயல்பட்டு வருவதாக போலீசாருக்கு புகார் வந்தது.
அதன் பேரில் ஏரல் தாசில்தார் கைலாச குமாரசாமி, ஆறுமுகமங்கலம் வருவாய் ஆய்வாளர் முத்து சரவணன், ஏரல் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) லட்சுமி பிரபா, சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் ஆய்வு செய்தனர். இதில் அரசு அனுமதி பெறாமல் மதுபான பார் செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அந்த மதுபான பாரை பூட்டி 'சீல்' வைத்தனர்.
A.SOLOMON RAJAமே 27, 2023 - 10:06:40 AM | Posted IP 172.7*****