» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வாங்கிய 53 நாட்களில் டயர் வெடித்ததால் நஷ்டஈடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு

சனி 25, மார்ச் 2023 8:46:39 PM (IST)

வாங்கிய 53 நாட்களில் டயர் வெடித்ததால் பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு டயர் கடை ரூ.7,500 நஷ்டஈடு வழங்க வேண்டுமென குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.

கன்னியாகுமரி மாவட்டம் கல்பாடியைச் சார்ந்த கண்ணன் என்பவர் நாகர்கோவிலுள்ள டயர் கடையில் ரூ.1,060 மதிப்புள்ள இரு சக்கர வாகனத்திற்கான டயர் ஒன்று வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய 53 நாட்களிலேயே இந்த டயர் வெடித்து சேதமடைந்துள்ளது. தனது மனைவியுடன் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது திடீரென டயர் வெடித்ததால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மருத்துவமனையில் இருவரும் சிகிச்சை பெற்றுள்ளனர். ஆகவே புதிய டயர் மாற்றித் தருமாறும், ஏற்பட்ட பாதிப்பிற்கு இழப்பீடு தருமாறும் கடைக்காரரை கேட்டுள்ளார். 

ஆனால் டயர் கடை மறுத்து விட்டது. உடனே வழக்கறிஞர் மூலம் நுகர்வோர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் இதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான கண்ணன் குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் ஆ.சங்கர் ஆகியோர் டயர் கடையின் சேவை குறைபாட்டினை சுட்டிக் காட்டி பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு டயருக்கு ஏற்கனவே செலுத்தப்பட்ட ரூ.1,060,  நஷ்ட ஈடு ரூ.7,500 மற்றும் வழக்கு செலவு தொகை ரூ.2,500 ஆக மொத்தம் ரூ.11,060ஐ ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.


மக்கள் கருத்து

அதிகMar 26, 2023 - 12:12:36 AM | Posted IP 162.1*****

காத்து அடித்து இருப்பான்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory