» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பணியிடம் : விண்ணப்பங்கள் வரவேற்பு
திங்கள் 20, மார்ச் 2023 4:50:39 PM (IST)
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள மேலாண்மை அலுவலர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது தொடர்பாக மருத்துவக் கல்லூரி முதல்வர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் "தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவமனை மேலாண்மை அலுவலர் (Hospital Quality Manager) - ஒரு (1) ஒப்பந்த பணியிடம் தொகுப்பூதியம் (Consolidated Pay) அடிப்படையில் மாதம் ரூ.60,000/- ஊதியத்தில் நிரப்பப்படவுள்ளது. மருத்துவமனை மேலாண்மை அலுவலர் (Hospital Quality Manager)- பணியிடம் 01, மாத தொகுப்பூதியம்- ரூ.60,000/-, அரசு ஆணை (நிலை) எண்.28, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, நாள்.24.01.2023
வயது வரம்பு - விளம்பர தேதியின்படி 45 வயது வரை,
தகுதி: அ) மருத்துவமனை நிர்வாகம்/சுகாதார மேலாண்மை/பொது சுகாதாரம் ஆகியவற்றில் முதுகலை ஆ) வழக்கமான படிப்புகளைக் கொண்ட விண்ணப்பதாரர்கள் மட்டுமே சேர்க்கப்பட வேண்டும் (கடிதத்தொடர்பு/திறந்த பல்கலைக்கழகம்/ஆன்லைன் பாடநெறி விலக்கப்பட வேண்டும்) அனுபவம்: அ) அவசியம்: விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் பொது சுகாதாரம்/மருத்துவமனை நிர்வாகத்தில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Skills and Competencies: அரசாங்க சட்டங்கள் மற்றும் கொள்கைகள் பற்றிய அறிவு அவசியமானவை, மருத்துவமனைகளுக்கு தரம் பற்றிய கருத்துக்கள் (NABH) ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டும் எழுத்து மற்றும் வாய்மொழி அறிவு, வரைவு திறன். திறமையான தகவல் தொடர்புத் திறன்கள், மக்களிடம் பேசுவதற்கும் கேட்பதற்கும் அவர்களுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்வதற்கும் வெளிப்படுத்தப்பட்ட திறனுடன் கணினித் திறன் மற்றும் தரவுத்தள மேலாண்மை திட்டங்கள் மற்றும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் MS Word, Excel Power Point போன்ற தொகுப்புகளில் பரிச்சயம் இருக்க வேண்டும். ஒப்பந்த வகை மற்றும் காலம் இந்த நிலை ஒப்பந்த அடிப்படையில் உள்ளது. 11 மாத காலத்திற்கு 1 நாள் இடைவெளியுடன் செயல்திறனின் அடிப்படையில் ஒப்பந்தம் நீட்டிக்கப்படலாம்.
விண்ணப்பங்கள் முழுமையான முகவரியுடன்) மற்றும் சான்றிதழ்கள் நகல்கள் (கல்வித்தகுதி / சாதிச்சான்று / ஆதார் நகல்) மற்றும் அனுபவச்சான்று தபால் மூலமாக இவ்வலுவலகத்தில் பெற இறுதி நாள் 31.03.2023, விண்ணப்பங்கள் மற்றும் - சான்றிதழ் நகல்கள் தபால் மூலமாக அனுப்ப வேண்டிய முகவரி: முதல்வர், அரசு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தூத்துக்குடி,
குறிப்பு: மேற்கண்ட பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. அப்பணியிடங்கள் எக்காரணம்கொண்டும் பணிவரன் முறை செய்யப்படவோ அல்லது நிரந்தரம் செய்யப்பட மாட்டாது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட 31/03/2023 பிறகு கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. மேலும் கூடுதல் விவரங்களை தூத்துக்குடி மாவட்ட தகவலியல் மையம் (NIC) வலைதளத்தில் தெரிந்து கொள்ளலாம்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
NagalakshmiMar 20, 2023 - 09:48:31 PM | Posted IP 162.1*****
,அனைவருக்கும் உதவி செய்ய வேணும்
NagalakshmiMar 20, 2023 - 09:46:50 PM | Posted IP 162.1*****
I love my job
ஏமாந்தவன்Mar 21, 2023 - 11:08:20 AM | Posted IP 162.1*****