» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இரவில் தடையின்றி மின்சாரம் வழங்கிட கோரிக்கை!
சனி 18, மார்ச் 2023 5:03:06 PM (IST)

கொங்கராயக்குறிச்சி பகுதிக்கு இரவில் தடையின்றி மின்சாரம் வழங்கிடவேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள கொங்கராயக்குறிச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இங்கு அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. கொங்கராயக்குறிச்சி, திருச்செந்தூர்பட்டி, அராபத் நகர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப்பகுதிகளில் அதிகளவில் மாணவ, மாணவியர்கள் உள்ளனர். தற்போது பிளஸ் டூ, பிளஸ் ஓன் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் துவங்கி நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் 5ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்க இருக்கிறது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக இப்பகுதிகளில் இரவில் அடிக்கடி மின்சாரம் திடீர் திடீரென கட்டாகி பல நிமிட நேரங்கள் கழித்து மீண்டும் வருகிறது. அதுபோக இரவில் வழக்கமான மின் அழுத்தமானது மிகவும் குறைந்து குறைந்த மின்அழுத்தமாக இருந்து வருகிறது. இதனால் பொதுத்தேர்வுகளுக்கு படித்து வரும் மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், இரவில் தடையின்றி மின்சாரம் வழங்கிடவேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கொங்கராயக்குறிச்சி கிளை தலைவர் ரஹமத்துல்லா தலைமையில் செயலாளர் கப்பல்மன்சூர் மற்றும் நிர்வாகிகள் ஸ்ரீவைகுண்டம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் முரசொலிமாறனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.
அம்மனுவின் அடிப்படையில், மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்காத வகையில் தடையின்றி மின்சாரம் வழங்கப்படும் என்று உதவி செயற்பொறியாளர் உறுதியளித்தார். முன்னாள் நிர்வாகிகள் மீரான், பீர்முஹம்மது, ஷேக்முஹம்மதுஅலி உள்ளிட்டோர் உடன் சென்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி பள்ளியில் ரூ.20.70 லட்சம் திட்டப் பணிகள்: கனிமொழி எம்பி துவக்கி வைத்தார்!
வெள்ளி 1, டிசம்பர் 2023 12:11:11 PM (IST)

வஉசி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை!
வெள்ளி 1, டிசம்பர் 2023 11:56:02 AM (IST)

தூத்துக்குடியில் பால் வியாபாரி வெட்டிக் கொலை : பட்டப்பகலில் பயங்கரம்!
வெள்ளி 1, டிசம்பர் 2023 11:47:25 AM (IST)

தூத்துக்குடியில் உலக எய்ட்ஸ் தின பேரணி!
வெள்ளி 1, டிசம்பர் 2023 10:44:00 AM (IST)

அழகு நிலையத்தின் பூட்டை உடைத்து திருட்டு : தூத்துக்குடியில் பரபரப்பு!
வெள்ளி 1, டிசம்பர் 2023 10:37:02 AM (IST)

தூத்துக்குடியில் ரூ.40லட்சம் மதிப்புள்ள லாரி திருட்டு: ஒருவர் கைது!
வெள்ளி 1, டிசம்பர் 2023 10:29:42 AM (IST)

திட்டமிட்ட சதிMar 18, 2023 - 05:30:37 PM | Posted IP 162.1*****