» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
விரால் மீன் உற்பத்தி தொழில்நுட்பம்: பிப்.17ல் ஒரு நாள் வளாக பயிற்சி
புதன் 8, பிப்ரவரி 2023 12:26:58 PM (IST)
தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வருகிற 17ம் தேதி "விரால் மீன்களின் இனப்பெருக்கம் மற்றும் குஞ்சு உற்பத்திக்கான தொழில்நுட்பம்” குறித்த ஒரு நாள் வளாக பயிற்சி நடைபெற உள்ளது.
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப்பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமான தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் "விரால் மீன்களின் இனப்பெருக்கம் மற்றும் குஞ்சு உற்பத்திக்கான தொழில்நுட்பம்’’ பற்றிய ஒரு நாள் வளாக வழியிலான பயிற்சி 17.02.2023 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை வழங்கபட உள்ளது. இப்பயிற்சியில் விரால் மீனின் உயிரியல், சினைமீன் தேர்வு செய்தல், ஹார்மோன் செலுத்தும் முறைகள், இனப்பெருக்கம், குஞ்சு சேகரித்தல், குஞ்சுகளை வளர்க்கும் தொழில்நுட்பம், உணவு மற்றும் உணவிடுதல் மேலாண்மை மற்றும் பொருளாதாரம் ஆகிய தலைப்புகளில் தொழில்நுட்ப வகுப்பு பயிற்சி அளிக்கப்படும்.
இப்பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள அனைவரும் ரூ.300 செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். பயிற்சியாளர்கள் நேரடியாகவோ அல்லது கல்லூரி வங்கி கணக்கு வாயிலாகவோ பணத்தை செலுத்தலாம். பயிற்சியின் முடிவில் பயிற்சியாளர்களின் சான்றிதழ் மற்றும் பயிற்சி கையேடு வழங்கப்படும். இப்பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள தொழில் முனைவோர் மற்றும் இதர நபர்கள் அனைவரும் 16.02.2023 மாலை 5.00 மணிக்குள் அலைபேசி மூலமாக அல்லது கீழ்க்கண்ட முகவரியில் தொடர்புகொண்டு கண்டிப்பாக பதிவு செய்து கொள்ள வேண்டும்.
பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
உதவி பேராசிரியர்,
மீன் வளர்ப்பு துறை,
மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
தூத்துக்குடி - 628 008
அலை பேசி எண் (8072208079, 9600205124)
மின் அஞ்சல்: [email protected], [email protected]
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி பள்ளியில் ரூ.20.70 லட்சம் திட்டப் பணிகள்: கனிமொழி எம்பி துவக்கி வைத்தார்!
வெள்ளி 1, டிசம்பர் 2023 12:11:11 PM (IST)

வஉசி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை!
வெள்ளி 1, டிசம்பர் 2023 11:56:02 AM (IST)

தூத்துக்குடியில் பால் வியாபாரி வெட்டிக் கொலை : பட்டப்பகலில் பயங்கரம்!
வெள்ளி 1, டிசம்பர் 2023 11:47:25 AM (IST)

தூத்துக்குடியில் உலக எய்ட்ஸ் தின பேரணி!
வெள்ளி 1, டிசம்பர் 2023 10:44:00 AM (IST)

அழகு நிலையத்தின் பூட்டை உடைத்து திருட்டு : தூத்துக்குடியில் பரபரப்பு!
வெள்ளி 1, டிசம்பர் 2023 10:37:02 AM (IST)

தூத்துக்குடியில் ரூ.40லட்சம் மதிப்புள்ள லாரி திருட்டு: ஒருவர் கைது!
வெள்ளி 1, டிசம்பர் 2023 10:29:42 AM (IST)
