» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக்கில் சென்று ஆட்சியா் செந்தில்ராஜ் கள ஆய்வு

வெள்ளி 27, ஜனவரி 2023 7:46:32 AM (IST)



ஆறுமுகனேரி பகுதியில் மோட்டாா் சைக்கிளில் சென்று மாவட்ட ஆட்சியா் செந்தில்ராஜ் கள ஆய்வு மேற்கொண்டாா்.

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரி பகுதியில் தினசரி சேகரமாகும் குப்பைகள் அப்பேரூராட்சிக்குள்பட்ட பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக கொட்டப்பட்டு வந்தது. இதனால் குப்பை மலை போல் குவிந்து சுகாதார சீா்கேட்டை ஏற்படுத்தியது. அந்த இடத்தை சுத்தப்படுத்தும்பணி ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.

இதனிடையே பேரூராட்டி நிா்வாகம் விடுத்த கோரிக்கையை ஏற்று, புதிய குப்பைக் கிடங்கு அமைக்க ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளாா். இதற்கான இடத்தை தோ்வு செய்ய ஆறுமுகனேரிக்கு வந்த அவா், கொட்டைமடைக்காடு பகுதியை பாா்வையிட சென்றபோது, சாலை பழுதடைந்து இருந்ததால் காா் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, விஏஓ சரவணனின் பைக்கில் அவரை பின்னால் அமர வைத்து சுமாா் 6 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள அப்பகுதிக்குச் சென்று கள ஆய்வு மேற்கொண்டாா்.


மக்கள் கருத்து

8056708113 இப்படிக்கு நபார்டு வங்கி(NABARD BANK)Jan 27, 2023 - 03:45:24 PM | Posted IP 162.1*****

ரோடு போட்டாச்சு, கடந்த ஆண்டு பெய்த பருவமழையில் சாலை மோசமாகிவிட்டது.....மேலும் குடிநீர் திட்டத்திற்காக தோண்டப்பட்ட சாலைகளை சீரமைக்கும் பணிக்கு மத்திய அரசாங்கம் போதிய நிதி வழங்கவில்லை....

மக்கள்Jan 27, 2023 - 03:25:51 PM | Posted IP 162.1*****

ஹெல்மெட் போடுவது அவரவர் விருப்பம் அது தவறு இல்லை. ஹெல்மெட் போடாதவர்களை குற்றவாளியாக பார்ப்பது தவறு, (fine) பணம் பறிப்பதும் தவறு தான்.. ஹெல்மெட்டால் முடி உதிர்வு , வியர்வை, தலைவலி அதிகம். ஆராய்ச்சி பண்ணாமல் ஹெல்மெட் சட்டத்தை கொண்டுவந்தவர் முட்டாள்.

ஏரியா காரன்Jan 27, 2023 - 03:23:06 PM | Posted IP 162.1*****

ஒரு தடவை கண்ணாடியை கழற்றி விட்டு சிமெண்ட் ரோடு அருகில் சுற்றி சென்று வாருங்கள் அப்போதே புரியும். புதிதாக அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலையில் பொதுமக்கள் செல்லும்போது சிரமம் மணல் கண்களில் பட்டு ஓட்டுவது சிரமமாக உள்ளது.

NameJan 27, 2023 - 01:19:34 PM | Posted IP 162.1*****

Sp sir helmet podalaya ivaru

NalladhuJan 27, 2023 - 11:32:15 AM | Posted IP 162.1*****

Nalladhu sir but helmet enge??

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory