» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மினி மாரத்தான் போட்டி: ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ., பரிசுகள் வழங்கினார்!

வெள்ளி 27, ஜனவரி 2023 7:28:24 AM (IST)




மினி மாரத் தான்போட்டிகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கு ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ., பரிசுகள் வழங்கினார்.

74 வது குடியரசு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம், ஏரல் வட்டம், ஆழ்வார்திருநகரி முதல் நாசரேத் வரை உள்ள ஏழு கிலோமீட்டர் தூரத்தை ஓடி கடக்கும் வகையில் மினி மாரத்தான் போட்டி நடந்தது. போட்டியை ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் திரு ஊர்வசி அமிர்தராஜ் மற்றும் தூத்துக்குடி கண்ணா சில்க்ஸ் ரகுபதி மற்றும் ஆழ்வார்திருநகரி பேரூராட்சி தலைவி சாரதா பொன்இசக்கி ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர், 

காலை 8 மணிக்கு ஆழ்வார்திருநகரி காமராஜ் சிலை முன்பு துவங்கிய ஓட்டம் யானை பாலம், செம்பூர் ரயில்வே கேட், மானாட்டூர் ரயில்வே கேட், வெள்ளமடம், முதலிமொழி ஆகிய பகுதிகளை கடந்து மர்க்காஸியஸ் மேல்நிலைப்பள்ளியை சென்றடைந்தது.  மர்க்காஸியஸ் பள்ளி தாளாளர் சுதாகர் பள்ளி முதல்வர் ஜெபகரன் பிரேம்குமார் மற்றும் அன்பு ரெடிமேட் அகிலன், நாசரேத் வாட்டர் ராஜா, ஜோஷி போர்வெல் ஜோஸ்வா ஆகியோர் துணையுடன் போட்டி சிறப்பாக நடைபெற்றது. நாசரேத் காவல்துறை சார்பாக நாசரேத் தேசிய மாணவர் படை மாணவர்கள் மற்றும் காவலர்கள் சிறப்பான நெறிமுறையில் போக்குவரத்து சீரமைத்து பாதுகாப்பு வழங்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital









Thoothukudi Business Directory