» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

போதை பொருட்கள் வழக்குகளில் சிறப்பான செயல்பாடு: தூத்துக்குடி அதிகாரிக்கு ஜனாதிபதி விருது

வியாழன் 26, ஜனவரி 2023 6:11:57 PM (IST)

போதை பொருட்கள் வழக்குகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவின் தூத்துக்குடி பிரிவு அதிகாரி முரளிக்கு ஜனாதிபதி விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்திய குடியரசு தினவிழா கொண்டாட்டத்தில் மத்திய மறைமுக வரி வாரியம், சுங்கத்துறை, மத்தியவருவாய்புலனாய்வு பிரிவு உள்ளிட்டவற்றில் சிறப்பாக பணியாற்றி வரும் அதிகாரிகள் 29 பேருக்கு ஜனாதிபதி விருது வழங்கப்பட்டுள்ளது.
இதில் பணியாற்றும் துறைகளில் அச்சுறுத்தல்களை கடந்து, துணிவுடன் பணியாற்றும் மத்திய அரசின் அதிகாரிகள், அலுவலர்களின் சிறப்பான சேவைக்காக ஜனாதிபதி விருது வழங்கப்பட்டுள்ளது.

இதில் இந்தியா முழுவதும் பணியாற்றி வரும் அதிகாரிகள் 29 பேர் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில்  சென்னை கோவை  உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்றிவரும் ஜிஎஸ்டி பிரிவு அதிகாரிகளுக்கும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.குறிப்பாக சென்னை மண்டல மத்திய வருவாய்புலனாய்வு பிரிவின் தூத்துக்குடி பிரிவில் பணியாற்றி வரும் மூத்த புலனாய்வு நுண்ணறிவு அதிகாரி முரளிக்கும் ஜானாதிபதி விருது வழங்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த ஆண்டுகளில் பல்வேறு சம்பவங்களில் பல கோடி மதிப்பிலான போதை பொருட்களை பறிமுதல் செய்த வழக்குகளில் சிறப்பாக செயல்பட்டமைக்காக அவருக்கு ஜனாதிபதிவிருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory