» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வெல்டிங் மிஷன் வைத்து அடகு கடையில் கொள்ளை முயற்சி - போலீஸ் விசாரணை

வியாழன் 26, ஜனவரி 2023 6:08:20 PM (IST)விளாத்திகுளத்தில் அடகு கடையில் வெல்டிங் மிஷன் வைத்து கதவை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் மதுரை சாலையில் அமைந்துள்ள சேர்மதுரை என்பவருக்கு சொந்தமான வசந்தா ஜூவல்லரி செயல்பட்டு வருகிறது மேலும் அதன் அருகிலே மீனாட்சி பைனான்ஸ் மற்றும் அடகு கடையும் இயங்கி வருகிறது. இக்கடையில் இரவு நேரத்தில் மர்ம நபர்கள் வெல்டிங் மெஷினை வைத்து ஷட்டரின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்து உள்ளனர். 

மேலும் அங்கு இருந்த சிசிடிவி கேமராக்கள் இணைப்புகளை துண்டித்தும் மிளகாய் பொடியை தூவியும் விட்டு சென்றுள்ளனர். காலையில் கடையை திறக்க சென்ற உரிமையாளர் வெல்டிங் வைத்து ஷட்டரின் பூட்டு உடைந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.இது குறித்து குறித்து விளாத்திகுளம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து

ஆண்டJan 26, 2023 - 08:08:12 PM | Posted IP 162.1*****

பரம்பரைதான்... பிடிங்க சார்...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory