» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 74வது குடியரசு தின விழா கோலாகலம் : ஆட்சியர் தேசியக் கொடியேற்றினார்!

வியாழன் 26, ஜனவரி 2023 10:11:22 AM (IST)


தூத்துக்குடியில் நடந்த குடியரசு தின விழாவில் தேசியக் கொடியேற்றி வைத்து ரூ.10.77 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வழங்கினார்.

தூத்துக்குடியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் 74வது குடியரசு தின விழா மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் வைத்து நடைபெற்றது. விழாவிற்கு, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமை வகித்து, தேசிய கொடியை ஏற்றி வைத்து, மாவட்ட எஸ்.பி., பாலாஜி சரவணன் முன்னிலையில் காவல் துறை, தீயணைப்பு துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் அமைதியையும், சமாதானத்தையும் வலியுறுத்தும் விதமாக வென்புறாக்கள் பறக்கவிடப்பட்டது. 


இந்நிகழ்ச்சியில் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 54 நபர்களுக்கு சான்றிதழ், 81பேருக்கு முதல்வரின் பதக்கங்களை ஆட்சியர் வழங்கினார். மேலும், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, சுகாதாரத்துறை, வேளாண்மை நலத்துறை, கூட்டுறவுத்துறை, உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள், சிறந்த மாணவர் விருது என மொத்தம் 406பேருக்கு பேருக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார். விழாவில் பல்வேறு துறைகளின் சார்பில் 45 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சத்து 77ஆயிரத்து 818 பேருக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

விழாவில் கூடுதல் ஆட்சியர் கெளரவ் குமார், மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ,  அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் கனகராஜ், முன்னோடி வங்கி அலுவலர் துரைராஜ், நபார்டு வங்கி துனை மேலாளர் துரை, வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம்,  மக்கள் தொடர்பு அலுவலர் நவீன் பாண்டியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, தாசில்தார் செல்வகுமார், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன், ஏடிஎஸ்பி கார்த்திகேயன், டிஎஸ்பிகள் சத்யராஜ், வெங்கடேஷன், ஆவுடையப்பன், அருள், லோகேஸ்வரன், தனிப்பிரிவு ஆய்வாளர் பேச்சிமுத்து, உட்பட பலர் கலந்துகொண்டனர்.குடியரசு தின விழாவில் மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் வாரிசுதாரர்களுக்கு அந்தந்த பகுதி வட்டாட்சியர்கள் மூலம் பொன்னாடை அணிவித்து  கெளரவிக்கப்பட்டனர். 

நற்சான்றிதழ் 

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், காசநோய் பிரிவில், சிறப்பாக பணியாற்றியமைக்காக, முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அ.அப்துல் ரஹீம் ஹீரா-வுக்கு தூத்துக்குடியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் கி.செந்தில் ராஜ் நற்சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital
Thoothukudi Business Directory