» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தோட்டத்தில் மின்மோட்டார்களை திருடியவர் கைது!

ஞாயிறு 4, டிசம்பர் 2022 7:15:58 PM (IST)

குலசேகரபட்டினம் பகுதியில் தோட்டத்தில் புகுந்து மின்மோட்டார்களை திருடியவரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி சந்தையடியூரை சேர்ந்த பொன்னையா மகன் கோபாலகிருஷ்ணன் (58) என்பவருக்கு சொந்தமான குலசேகரபட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொட்டங்காடு சாலையில் உள்ள தோட்டத்தில் கடந்த 02.12.2022 அன்று மின் மோட்டார்கள் திருடுபோயுள்ளது. இதனையடுத்து கோபாலகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் குலசேகரப்பட்டினம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதில் உடன்குடி செட்டியாபத்து முத்துகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த சுடலை மகன் பட்டு கிருஷ்ணன் (29) என்பவர் தோட்டத்திலிருந்து மின் மோட்டார்களை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து குலசேகரபட்டினம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முனியாண்டி வழக்கு பதிவு செய்து பட்டு கிருஷ்ணனை கைது செய்து, அவரிடமிருந்து ரூ.18,000/- மதிப்பிலான 2 மின் மோட்டார்கள் மற்றும் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

இளம்பெண் தற்கொலை: போலீஸ் விசாரணை

வியாழன் 30, நவம்பர் 2023 11:53:05 AM (IST)

Sponsored Ads



Arputham Hospital










Thoothukudi Business Directory