» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மிளகாய் பயிருக்கு நிவாரணத் தொகை வழங்க வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

வியாழன் 1, டிசம்பர் 2022 4:38:04 PM (IST)விளாத்திகுளம் வட்டார பகுதிகளில் மிளகாய் பயிருக்கு உடனடியாக நிவாரணத் தொகை வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டார பகுதி விவசாயிகளுக்கு மிளகாய் பயிருக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும், தமிழக அரசே இன்சூரன்ஸ் நிறுவனம் தொடங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் புவிராஜ் தலைமையில், மாவட்டத் தலைவர் ராகவன் முன்னிலையில் வேளாண் விரிவாக்கம் மையத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதில், 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory