» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோடங்கிபட்டி கிராமத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள்: மார்கண்டேயன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

வியாழன் 1, டிசம்பர் 2022 3:45:04 PM (IST)புதூர் ஊராட்சி ஒன்றியம் அயன் கோடங்கிபட்டி கிராமத்தில் வளர்ச்சி திட்டப் பணிகளை மார்கண்டேயன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம், புதூர் ஊராட்சி ஒன்றியம், அயன் கோடங்கிபட்டி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.5.50 லட்சம் மதிப்பீட்டில் பேருந்து நிறுத்தமும், தாப்பாத்தி கிராமத்தில், ரூ.5.50 லட்சம்  மதிப்பீட்டில் பேருந்து நிறுத்தமும், வீரப்பட்டி கிராமத்தில் ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பேவர் பிளாக் சாலை, சிமெண்ட் சாலை, விவசாய உலர்களம் உள்ளிட்ட பணிகளை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் துவக்கி வைத்தார்.

நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவபாலன், பொறியாளர்கள் ரவிச்சந்திரன், தமிழ்ச்செல்வன், ஒன்றிய செயலாளர்கள் மும்மூர்த்தி, ராதாகிருஷ்ணன், புதூர் செல்வராஜ், பேரூர் கழகச் செயலாளர் மருதுபாண்டியன், மாவட்ட கவுன்சிலர் ஞானகுருசாமி, வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், அயன் கோடாங்கிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி பரமசிவம், தாப்பாத்தி ஊராட்சி மன்ற தலைவர் பெருமாளம்மாள் பாண்டி, வீரப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சுசிலாராணி, ஆற்றங்கரை ஊராட்சி மன்ற தலைவர் சீத்தாராமன், ஒன்றிய குழு உறுப்பினர் பரமேஸ்வரி, வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory