» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ரூ.3.60 லட்சம் குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் - 3 பேர் கைது

வியாழன் 1, டிசம்பர் 2022 3:05:06 PM (IST)தூத்துக்குடியில் ரூ.3.60லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தியதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஒரு சரக்கு வாகனம், ஒரு இருசக்கர வாகனம் மற்றும் 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பாலாஜி சரவணன் உத்தரவின்படி நகர காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் மேற்பார்வையில் தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன் மற்றும் உதவி ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது, தாளமுத்துநகர், தஸ்நேவிஸ் நகர் பகுதியில் உள்ள தனியார் குடோன் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் சரக்கு வாகனத்துடன் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்தனர்.

இதில், தூத்துக்குடி ஆரோக்கியபுரம் பகுதியை சேர்ந்த இசையன் மகன் போவாஸ் (33), சிலுவைப்பட்டி பகுதியை சேர்ந்த ஜீவா மகன் முத்துக்குமார் (30) மற்றும் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் மகன் ராஜேஷ் (40) ஆகியோர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோத விற்பனைக்காக சரக்கு வாகனத்தில் வைத்திருந்ததும் தெரியவந்தது.

உடனே தனிப்படை போலீசார் 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த ரூ.3லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 18000  புகையிலை பாக்கெட்டுகள், ஒரு சரக்கு வாகனம், ஒரு இருசக்கர வாகனம் மற்றும் 5 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory