» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கொலை வழக்கில் தந்தை-மகன் உட்பட 3பேர் கைது!

வியாழன் 1, டிசம்பர் 2022 11:29:01 AM (IST)

தூத்துக்குடியில் கொலை வழக்கில் தந்தை-மகன் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

தூத்துக்குடி சின்னக்கண்ணுபுரம் பகுதியைச் சோ்ந்த தங்கத்துரை மகன் ஜெயக்குமாா்(45). இவருக்கும் குறிஞ்சி நகரைச் சோ்ந்த சரவணன் (29) என்பவருக்கும் இருசக்கர வாகனம் விற்பனை செய்வதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக நேற்று ஏற்பட்ட தகராறில் தலையில் பலத்த காயமடைந்த ஜெயக்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். 

இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப் பதிந்து, குறிஞ்சி நகர் 2வது தெருவைச் சேர்ந்த சரவணன் (30), அவரது தந்தை முருகன் (53), தாய் பொன் வைரவதி (47) ஆகிய மூவரை கைது செய்தார். 


மக்கள் கருத்து

AdvocateDec 1, 2022 - 03:29:44 PM | Posted IP 162.1*****

Nathu matum 2 murder sipcot limit la

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory