» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தந்தை திட்டியதால் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி: தூத்துக்குடி ரயில் நிலையத்தில் மீட்பு!

புதன் 30, நவம்பர் 2022 11:16:06 AM (IST)

தந்தை திட்டியதால் வீட்டை விட்டு வெளியேறிய அசாம் சிறுமி தூத்துக்குடி ரயில் நிலையத்தில மீட்கப்பட்டுள்ளார். 

தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் இன்று காலை 7 மணி அளவில் தனியாக நடைமேடையில் சுற்றித்திரிந்த சிறுமியை ரயில்வே பாதுகாப்பு படை காவலர் ராஜாராம் விசாரித்தபோது அச்சிறுமி அசாம் மாநிலம், கர்பி அங்கோலங் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி எனத் தெரியவந்தது.

அவர் அங்குள்ள பள்ளியில் படித்து வருவதாகவும், தன்னுடைய அப்பா திட்டியதால் வீட்டை விட்டு வெளியேறி ரயில் மூலம் தூத்துக்குடி வந்தததும் தெரியவந்தது. இதையடுத்து அச்சிறுமியை ரயில்வே குழந்தைகள் பாதுகாப்பு உதவி மைய ஒருங்கிணைப்பாளர் அன்பரசுவிடம் ஒப்படைத்தனர். மேலும் அச்சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory