» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி - மைசூரு எக்ஸ்பிரஸ் ரயில்களில் எல்எச்பி சொகுசு பெட்டிகள் இணைப்பு

வெள்ளி 25, நவம்பர் 2022 8:24:11 PM (IST)

தூத்துக்குடி - மைசூரு எக்ஸ்பிரஸ் ரயில்களில் எல்எச்பி சொகுசு பெட்டிகள் இணைக்கப்பட உள்ளது.

இது தொடர்பாக ரயில்வே வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் "ரயில் எண்.16232 / 16231 மைசூரு - மயிலாடுதுறை - மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் ரயில் எண்.16236 / 16235 மைசூரு - தூத்துக்குடி - மைசூரு எக்ஸ்பிரஸ் ரயில்களின் வழக்கமான பெட்டிகள் எல்எச்பி (Linke Hofmann. Busch) பெட்டிகளாக மாற்றப்பட உள்ளன. இந்த ரயில் ஓசூர், தர்மபுரி, சேலம், ஈரோடு, கரூர் வழியாக ரயில்கள் இயக்கப்படுகின்றன.

ரயில் எண்.16232 மைசூரு - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் 25.11.2022 முதல் LHB பெட்டிகளுடன் இயக்கப்படும்.

ரயில் எண்.16231 மயிலாடுதுறை - மைசூரு எக்ஸ்பிரஸ் ரயில் 26.11.2022 முதல் LHB பெட்டிகளுடன் இயக்கப்படும்.

ரயில் எண்.16236 மைசூரு - தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயில் 27.11.2022 முதல் LHB பெட்டிகளுடன் இயக்கப்படும்.

ரயில் எண்.16231 தூத்துக்குடி - மைசூரு எக்ஸ்பிரஸ் ரயில் 28.11.2022 முதல் LHB பெட்டிகளுடன் இயக்கப்படும்.

எல்எச்பி பெட்டிகளின் முக்கிய அம்சங்கள்

ஜெர்மன் தொழில்நுட்பம் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ள எல்எச்பி பெட்டிகள் எளிதில் தீப்பிடிக்காது, ஒரு ரயில் பெட்டி 51.7 டன் எடை கொண்டது. அதிர்வுகள் இல்லாமல், பாதுகாப்பாகவும் வேகமாகவும் செல்லும் வசதியுள்ளது. சொகுசு இருக்கைகள், செல்போன் சார்ஜ் போடும் வசதி உட்பட பல்வேறு வசதிகள் இதில் உள்ளன.

வழக்கமாக செல்லும் விரைவு ரயில் பெட்டியில் 72 படுக்கைகள், ஏசி பெட்டியில் 64 படுக்கைகள் இருக்கும். எல்எச்பி பெட்டிகளில் 80 படுக்கைகள், ஏசி பெட்டியில் 72 படுக்கைகள் உள்ளன. ரயில்வேத் துறையில் முக்கிய விரைவு ரயில்களில் எல்எச்பி பெட்டிகள் படிப்படியாக இணைக்கப்பட்டு வருகின்றன. இந்த பெட்டிகளின் ஏர் கண்டிஷனிங் அமைப்பு அதிக திறன் கொண்டது.


மக்கள் கருத்து

BabuNov 27, 2022 - 06:24:58 PM | Posted IP 162.1*****

Itha joint panni rompa naal aachu apuram sigusu yellam onnum kidayathu over sound than dappa coach than lbh

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory