» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 26ம் தேதி மது விற்பனைக்கு தடை: ஆட்சியர் உத்தரவு!

வெள்ளி 23, செப்டம்பர் 2022 8:41:18 PM (IST)

தூத்துக்குடியில் வெங்கடேஷ் பண்ணையார் நினை தினத்தை முன்னிட்டு வருகிற 26ம் தேதி மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிட்ட செய்திக்குறிப்பு : தூத்துக்குடி மாவட்டம் அம்மன்புரத்தில் வெங்கடேஷ் பண்ணையார் நினைவிடத்தில் அவரது 19-வது நினைவு தினத்தை முன்னிட்டு 26.09.2022 அன்றைய தினம் தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, சாத்தான்குளம், ஏரல், திருச்செந்தூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம்  வட்டங்களில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள்  மற்றும் மதுபானக் கடையுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் மூடப்பட்டிருக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட தினத்தில் மதுபான விற்பனை, மதுபானத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்க சட்டத்தின் கீழ் கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் என அறிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

இளம்பெண் தற்கொலை: போலீஸ் விசாரணை

வியாழன் 30, நவம்பர் 2023 11:53:05 AM (IST)

Sponsored AdsArputham Hospital


Thoothukudi Business Directory