» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடிக்கு லாரியில் வந்த ரூ.1.75 லட்சம் ஜவுளி திருட்டு: போலீஸ் விசாரணை

வெள்ளி 23, செப்டம்பர் 2022 12:38:11 PM (IST)

மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு லாரியில் கொண்டு வரப்பட்ட ரூ.1.75 லட்சம் மதிப்புள்ள ஜவுளி திருடுபோனது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மதுரை  இடையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன் வரதராஜன் (48). மொத்த ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இவர் தூத்துக்குடியில் உள்ள கடைகளுக்கு, டபிள்யூ.ஜி.சி., ரோட்டில் உள்ள லாரி புக்கிங் ஆபீஸ் மூலம் லாரியில் ஜவுளி பார்சல்களை அனுப்பி வைத்துள்ளார். தூத்துக்குடிக்கு வந்தபோது லாரியில் இருந்த 14 மூடை ஜவுளிகள் காணாமல் போய்விட்டது. இதன் மதிப்பு ரூ.1லட்சத்து 75ஆயிரம் ஆகும். இதுகுறித்து மத்தியபாகம் காவல் நிலையத்தில் வரதராஜன் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் முருகபெருமாள் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து

டிரைவருக்குSep 23, 2022 - 04:12:44 PM | Posted IP 162.1*****

தொடர்பு இருக்கு

இனிமேல்Sep 23, 2022 - 04:12:08 PM | Posted IP 162.1*****

டிரக்குகள் gps மற்றும் காமிரா பொருத்தப்பட்டு இருக்க வேண்டும்...

hdhdhdbfbSep 23, 2022 - 04:11:08 PM | Posted IP 162.1*****

திருடர் குல திலகம்.... மொபைல் நம்பர் எல்லாம் டிரேஸ் பண்ணுங்க... எல்லாம் அந்த ஆண்ட பரம்பரை தான்...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham Hospital

Thoothukudi Business Directory